வசூல் வெள்ளை அறிக்கை! திரைப்படவுலகம் புதிய முடிவு! முன்னணி ஹீரோக்கள் பேரதிர்ச்சி?

தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்...

தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது தயாரிப்பாளர்களுக்கு. பெப்சி தொழிலாளர்களின் தாறுமாறான கூலி. ஹீரோக்களின் இடி மின்னல் சம்பளம். திருட்டு விசிடிக்காரர்களின் உடனடி சேவை என்று தத்தளித்து வரும் சினிமாவை காப்பாற்ற என்ன வழி என்று தினந்தோறும் பேசி பேசி மாய்கிறது தமிழ்சினிமாவின் அமைப்புகள்.

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் இன்று அதற்கு ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார். அதை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவும் ஆமோதித்திருக்கிறார். சுப்ரமணியன் பேசிய பல விஷயங்களில் மிக முக்கியமான விஷயம் ஒன்றுதான் கிடுக்கிப்பிடி!

“இன்று படம் திரைக்கு வந்த நான்கு நாட்களுக்குள்ளேயே இந்தப்படம் இமாலய வெற்றி, ஆரவாரமான வெற்றின்னு விளம்பரம் கொடுத்து உங்களை நீங்களே ஏமாத்திக்கிறீங்க. உண்மையில் அப்படியா இருக்கு நிலைமை? நீங்கள் விளம்பரம் கொடுப்பதுதான் உண்மை போலிருக்கு என்று ஹீரோக்களும் நினைத்துக் கொண்டு கண்டபடி சம்பளத்தை ஏற்றி விடுகிறார்கள். அதனால் இனி ஒவ்வொரு மாதமும் கூடும் பெடரேஷன் மீட்டிங்கில், அந்தந்த மாதம் ரிலீஸ் ஆன படங்களின் வசூல் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். முதலீட்டிலிருந்து எத்தனை சதவீதம் வசூல். எத்தனை சதவீதம் லாபம், அல்லது நஷ்டம் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்கும் பட்சத்தில், தானாகவே அதிக சம்பளம் கேட்கும் ஹீரோக்கள் உண்மையை உணர்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

திருப்பூர் சுப்ரமணியத்தின் இந்த கோரிக்கைக்கு திரையுலக அமைப்புகள் கைதட்டி வரவேற்பு கொடுத்துள்ளன. அவர் நினைத்தது போல நடந்தால், பல அல்டாப் ஹீரோக்களுக்கு முதுகு தண்டில் ஜிலீர் நிச்சயம்.

பேசியபடி நடக்குமா?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About