­
சொழலி, கலகி, அழலி, எறலி - அர்த்தம் சொல்கிறார் பாடலாசிரியர் விவேக்! - !...Payanam...!

சொழலி, கலகி, அழலி, எறலி - அர்த்தம் சொல்கிறார் பாடலாசிரியர் விவேக்!

இந்த வருடம் டாப் கியரில் பறக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது ஹிட் லிஸ்ட்டில் சமீபத்திய வரவு கொடி. அதிலும் சுழலி பாடல்  பேய் ஹி...

இந்த வருடம் டாப் கியரில் பறக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது ஹிட் லிஸ்ட்டில் சமீபத்திய வரவு கொடி. அதிலும் சுழலி பாடல்  பேய் ஹிட்.

சொழலி, கலகி, அழலி, எறலி... என்ன இது வார்த்தைகளே வினோதமா இருக்கே என பாடலாசிரியர் விவேக்கை அலைபேசியில் அழைத்தோம்.

”பாட்டு வெளியானதிலிருந்து நிறைய பேர் கேட்டுட்டாங்க, "சுழலினா என்ன அர்த்தம்?"னு. ஏமாத்துக்காரினு அர்த்தம், சுழற்றி அடிப்பவளேனு கூட எடுத்துக்கலாம். நீங்க பாட்டு வர்ற சூழலோட பார்க்கும் போது ஏன் இந்த வார்த்தைனு புரியும். படம் வர்றதுக்கு முன்னாலயே பாட்டு பெரிய ரீச் ஆனதில் பெரிய சந்தோஷம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும், வார்த்தைகள் தெளிவா தெரியும் படி பாடின விஜய் நரேனுக்கும் நன்றிகள்.”

"பாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் நிறைய கரெக்‌ஷன் போட்டிருக்கார் போல?"

இந்தப் பாட்டு எழுத எனக்கு ஒரு அரை மணிநேரம் ஆச்சு. ஐபாட்ல எழுதி சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு அனுப்பி வச்சேன். அவர் அதைப் ப்ரிண்ட் எடுத்து சில டவுட்டு கேட்கற மாதிரி, கலாய்ச்சார். அவர் ரொம்ப அமைதினு நினைக்கறீங்களா? செம கலாட்டாவான ஆளு. அந்தப் பேப்பரை தான் ஃபேஸ்புக்ல போட்டேன்.

லிரிக் வீடியோல வரிகள் பார்த்து கலகட்டிப் போறவளேன்னா... சிலர் வயல்ல வர்ற களைனு நினைச்சர்றாங்க. ஆட்டம் கலகட்டுதுனு சொல்லுவோமே அந்த அர்த்தத்தில் எழுதினது.



வரிகள்:

ஏ சொழலி அழகி வெலகி கலகட்டிப் போறவளே

இருடி திருடி

அழகூட்டித்தான் நகரும் அரளி (விஷச் செடி)

நொர தள்ளிப் போனேன் வெட்கம் கொறடி

ஒன் வயசத்தான் தித்திப்பா தின்னேன்.

உசுரத்தான் கத்தி சொன்னேன்



பொட்டக் கோழி அலகுல

என்னக் கொத்தி அலயுற

விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட ஓட்டு மனசுல

கண்ண தூக்கி எறியுற

திட்டா எட்டி செதறுறேன் எறலி

(முட்டை ஓடு மாதிரி இருக்கும் என்னுடைய மனசில் கண்ணை எறியறதால சில்லு சில்லா செதறுறேன் மஞ்சள் நிற பூவே. எறலி - கொன்றை மலர்)

ஏ சொழலி அழகி கலகி கலகட்டிப் போறவளே

இருடி திருடி

(கலகி - கலகமூட்டுபவள். ஆனா, லிரிக் வீடியோல கலரினு தப்பா
வந்திடுச்சு. இதில் வரும் இருடி திருடிக்கு பதிலா நெழலி (நிழல் தருபவள்னு அர்த்தம் படும்படியா எழுதினேன்)   வெரலி - (விரலி மஞ்சள்) எழுதியிருந்தேன். ஆனா, வர்த்தைகள் ரொம்ப குழப்பமா இருக்குமேனு தான் மாத்திட்டோம்)

கெடமாட்டுக்கு உணவா அழலி

வித போட்டக் காட்ட திங்கக்குடுடி

(பெரிய மாட்டுக்கு சாப்பாடா வெள்ளை கடுகு எப்படிப் பத்தும்? விதை போட்ட காடு மொத்தத்தையும் குடுனு அர்த்தம்)

நீ மனசோடா கல்வெட்டா நின்ன

கண்வெட்டா வெட்டி கொன்ன

பொட்டக் கோழி அலகுல

என்னக் கொத்தி அலயுற

விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட ஓட்டு மனசுல

கண்ண தூக்கி எறியுற

திட்டா எட்டி செதறுறேன் எறலி



ஏ சொழலி...



ஆலங்காட்டுக் கர

ஆத்தில் நீந்தும் பெற

ஒடயிற அல்லி ஒலறுது நித்தம்

காதல வண்டு காதுல கத்தும்

பொழங்குற வண்டு முழுங்குது முத்தம்

பூவுல தத்தித் தாவுற சத்தம்



பொழியிது தேனு

பொதையிற நானு

அடமழ கொட்டுச்சா

கனவுல மாட்டிக் கொழம்புன மீனு

முழிச்சதும் தப்புச்சா?



பொட்டக் கோழி அலகுல

என்னக் கொத்தி அலயுற

விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட ஓட்டு மனசுல

கண்ண தூக்கி எறியுற

திட்டா எட்டி செதறுறேன் எறலி

ஏ சொழலி...

”இந்தப் பாட்டு முழுசும் பூவில் தேனெடுக்கும் வண்டு பாடற மாதிரி ஆரம்பிச்சு மீனுடைய கனவா முடியும். அதாவது மீன் அதனுடைய கனவில் தன்னை ஒரு வண்டா நினைச்சுக்கும். பூவுடைய காதில் தினமும் காதலை சொல்லும் வண்டு, பூ கிட்டயிருந்து முத்தத்தை உணவா சாப்பிட்டுட்டுப் போகுது. பூவிலிருந்து தேன் மழை மாதிரி பொழியிது. இதுல புதைஞ்சா என்ன பண்றதுனு தெரியலையேனு நினைக்கறப்போ மீன் தன்னுடைய கனவிலிருந்து முழிச்சுக்கும். நான் தான் மீனாச்சே! நீந்தித் தப்பிச்சிடுவேனேனு நினைக்கும் போது கோழியுடைய அலகில் இருக்கும். எப்படி இருந்தாலும் தன் காதலிகிட்டயிருந்து தப்பிக்க முடியாலையே காதலன் சொல்ற மாதிரி முடியும் பாட்டு.” என்கிறார் விவேக்.

இப்போ முதல்ல இருந்து வரிகள படிங்க. இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About