ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதில் ஏன் தாமதம்?

கடந்த நவம்பர் 2-ம் தேதியன்று ஜெயலலிதா ஸ்பெஷல் வார்டுக்கு மாறுகிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. அவருக்காக சிறப்...

கடந்த நவம்பர் 2-ம் தேதியன்று ஜெயலலிதா ஸ்பெஷல் வார்டுக்கு மாறுகிறார் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. அவருக்காக சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய அறையும் ரெடியானது. எந்த நேரத்திலும் இந்த அறைக்கு ஜெயலலிதா வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அன்று காலை, மாலை, இரவு... என்று வெவ்வேறு நேரம் சொல்லப்பட்டது. ஆனால், வார்டு மாற்றப்படவில்லை. அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். டாக்டர்கள் கிளியரன்ஸ் தரவில்லை என்று தெரிந்தது. இதற்கு பின்னணி காரணம்? ஜெயலலிதாவுக்கு கழுத்தில் (tracheostomy) மூச்சுக்குழாய் அப்படியே இருக்கிறது. அதேபோல், செயற்கை சுவாசத்துக்காக பொருத்தப்பட்ட 'வென்டிலேட்டர்' சில நிமிடங்கள் எடுத்து, இயற்கையாக ஜெயலலிதாவால் சுவாசிக்க முடிகிறதா? என்று செக் செய்தார்கள். ஆனால், அதுவும் சரிபட்டு வரவில்லை. இப்படியிருக்க.. ஜெயலலிதாவின் உடல்நிலை நவம்பர் 5-ம் தேதி நிலவரப்படி என்ன என்று விசாரித்தோம்! மருத்துவமனை வட்டாரத்தில் 'Hypoxia' என்கிற மெடிக்கல் வார்த்தையை உச்சரிக்கிறார்கள். அது என்ன?

அதுபற்றி மருத்துவர் ஒருவர் கூறும்போது, " ரத்தம், திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்லுவதில் ஏற்படும் குறைபாட்டை 'Hypoxia' என்று சொல்வோம். இதனால், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். படபடப்பு, இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். இந்தக் குறைபாட்டை சரிசெய்ய வென்டிலேட்டர் முறையில் செயற்கை சுவாசம் தரவேண்டும். அப்போதுதான் நோயாளி நார்மலாக இருக்கமுடியும்'' என்கிறார்.

இந்தக் காரணத்தில்தான், ஜெயலலிதா வார்டு மாறுவது மேலும் சிலநாட்களுக்கு தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், நவம்பர் 4-ம் தேதியன்று அப்போலோவின் மருத்துவக் கையேடு புத்தக வெளியீட்டு விழாவில் சேர்மன் பிரதாப் ரெட்டி கலந்துகொண்டார். முதல்வர் உடல்நலம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போது, ''முதல்வர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். இனிமேல் எப்போது மருத்துவமனையிலிருந்து செல்வார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் அவருக்கு, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் அவர் மிகவும் திருப்திகரமாக உணருகிறார். இதில் டாக்டர்கள் மட்டுமல்லாமல் நர்ஸ்கள் தொடங்கி பணியாட்கள் வரை அனைவரது பங்குமே குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இங்கிலாந்து மருத்துவர்கள், டெல்லி மருத்துவர்கள் என அனைவருமே தங்களது முழு உழைப்பையும் அவரது சிகிச்சைக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள். அவருக்கு அளித்து வரும் மொத்த சிகிச்சை முறையிலும் மிக முக்கியமான சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது. சொல்லப்போனால் உலகின் தலைசிறந்த சிகிச்சைமுறைகள் அனைத்தும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையும் சேர்ந்து பயனளித்திருக்கிறது. அவர் விரைவிலேயே உங்களை எல்லாம் வந்து சந்திப்பார்” என்றார்.

''முதல்வர் எப்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “அவருடைய இயல்பு உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். அவர் தன் உடல்நிலையை நல்ல முறையில் புரிந்துகொண்டுள்ளார். விரைவிலேயே ‘நான் எப்போது வீடு திரும்பலாம்?’ என்று அவர் என்னிடம் கேட்பார் என எதிர்பார்க்கிறேன். சாதாரண மருத்துவ வார்டுக்குச் செல்வதாகட்டும் அல்லது தன் வீட்டுக்குத் திரும்புவதாகட்டும்... இனி எந்த முடிவும் அவர் கையில்தான் இருக்கிறது. விரைவில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்பார்” என்று சிரித்தபடியே பதிலளித்தார். பிரதாப் ரெட்டி ஏன் இப்படி திடீரென்று சொன்னார் என்பதுதான் மருத்துவர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது!

மேலும் பல...

1 comments

  1. why
    thereare NO COMMENTS Iin this blog
    when you ernestly write about jayalalitha.... the author could explain this....

    ReplyDelete

Blog Archive