குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஊர்வசி இணையும் 'ஓ! அந்த நாட்கள்'

 ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்து வரும் படத்துக்கு 'ஓ! அந்த நாட்கள்...

 ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ஊர்வசி நடித்து வரும் படத்துக்கு 'ஓ! அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

1980 - 90களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி மற்றும் ஊர்வசி. நடிகைகள் என்பதைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். தற்போது இவர்கள் நால்வரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.

முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை ஜேம்ஸ் வசந்தன் இயக்கி வருகிறார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் ஆஸ்திரேலியாவிலேயே முடித்து திரும்பியிருக்கிறது படக்குழு.

முழுக்க நட்பை பின்புலமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். தற்போது இப்படத்துக்கு 'ஓ! அந்த நாட்கள்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் பல...

0 comments

Blog Archive