சினிமா
நிகழ்வுகள்
காலா ஸ்டில்கள் இனி சுதந்திரமாக வருமா?
June 14, 2017
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, பூத்திருச்சு வெட்கத்தை விட்டு’
என்கிற டைப் இல்லை பா.ரஞ்சித். கபாலியிலும் சரி. காலாவிலும் சரி. ரஜினியின் கெட்டப்பை முதல் நாளே வெளியிட்டு மற்ற மற்ற அலட்டல் ஹீரோக்களை அலறவிட்டவர் அவர். “உடைக்கணும்…. எல்லா சென்ட்டிமென்ட்டையும் உடைக்கணும்” என்கிற அவரது தில்லுக்கு ஒரு பாராட்டு. ஆனால் துணிச்சலாக எதை செய்தாலும் அதன் மேல் பெட்ஷீட்டை போட்டு ஒரேயடியாக மூடி வைக்க ஒரு கூட்டம் கிளம்பும் அல்லவா? அந்தக் கூட்டம் காலாவின் படைப்பாளி ரஞ்சித்துக்கு பயம் காட்டி வருகிறதாம்.
ரஜினியின் ஸ்டில்களை இப்படி ஒவ்வொரு நாளும் வெளியிட்டா படத்துக்கான கிரேஸ் குறைஞ்சுடுமே என்பதுதான் அந்த பயம்காட்டல்! இதற்கெல்லாம் பா.ரஞ்சித் மசிவாரா, மாட்டாரா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரே சரி என்று சொல்வது போல ஒரு நெருக்கடி! இந்த நெருக்கடியை கொடுத்திருப்பவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் என்கிறார்கள்.
‘காலா’ படத்திற்கு முன்பே ரஜினி ஷங்கரின் ‘2.0’ படம் வெளிவந்துவிடும் என்பதால், ‘காலா’ படத்தின் ஸ்டில்களை அடிக்கடி வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
பெரிய டைரக்டர்… கேட்டுதானே ஆவணும்!

0 comments