120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்!

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளது. இலவச  4 ஜி டேட்டா, அன் லிமிட்டட் கால்ஸ் என்று கடந்த ஆண்டு அதிரடியாக களமிறங்...

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளது.

இலவச  4 ஜி டேட்டா, அன் லிமிட்டட் கால்ஸ் என்று கடந்த ஆண்டு அதிரடியாக களமிறங்கியது ஜியோ. அதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும் ஆஃபர்களை அள்ளி வழங்கி வந்தன. இதனால் ஜியோவுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளரின் பெயர், மெயில் ஐ.டி, மொபைல் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண், வாடிக்கையாளரின் வட்டம் (பகுதி) உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளது. இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தரவு மீறல் (data breach) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இது குறித்து ஜியோ அளித்துள்ள விளக்கத்தில், "வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக, ஆதாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள், உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. எந்தத் தகவலும் லீக் ஆகவில்லை. இது தொடர்பாக, சட்டத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About