வீட்டுச் சுவரைத் தாண்டினால் `பிக் பாஸ்' என்ன செய்வார் தெரியுமா?

நாளுக்கு நாள் பரபர ட்விஸ்டோடு பயணித்துக்கொண்டிருக்கிறது `பிக் பாஸ்' நிகழ்ச்சி. ஆர்த்தி, காயத்ரி மற்றும் ஜூலியானாவுக்கு இடையே நடந்த வா...

நாளுக்கு நாள் பரபர ட்விஸ்டோடு பயணித்துக்கொண்டிருக்கிறது `பிக் பாஸ்' நிகழ்ச்சி. ஆர்த்தி, காயத்ரி மற்றும் ஜூலியானாவுக்கு இடையே நடந்த வாக்குவாதம், கஞ்சா கருப்பு வெளியேற்றம் போன்றவை ஒவ்வொரு நாளும் மக்களிடையே பலதரப்பட்ட விவாதங்களை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இந்த நிகழ்ச்சியின் புரொமோ, `பிக் பாஸ்' பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, நெட்டிசன்கள் மீம்ஸ் மழை பொழிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த புரொமோ வீடியோவில் நடிகர் பரணி, விரக்தியின் உச்சத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து, காம்பவுண்ட் சுவரில் ஏறிக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இதேபோன்று ஒரு சம்பவம் இந்தி `பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் நடந்துள்ளது.

`பிக் பாஸ் - 7' நிகழ்ச்சியின் போட்டியாளரான குஷால் தான்டோன் என்பவர்தான் அங்கே வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டிக் குதித்தது. குஷாலுக்கும் அவரின் சகப்போட்டியாளரான தனிஷா முகர்ஜிக்கும் ('உன்னாலே உன்னாலே' படத்தின் நாயகி. பிரபல இந்தி நடிகை கஜோலின் தங்கை ) வாக்குவாதம் ஏற்பட, அதில் கடுப்பான குஷால், `இனி இங்கே இருக்க முடியாது' எனச் சொல்லி, வீட்டின் சுவரில் ஏறி வெளியே குதித்திருக்கிறார். 2013-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம், இந்தித் தொலைக்காட்சி உலகைப் பரபரப்பாக்கியது. பின்னர், `பிக் பாஸ் - 8' நிகழ்ச்சியிலும் அலி க்யுலி மிர்சா என்பவர், ``மற்ற போட்டியாளர்கள் அனைவரும் என்னை விரோதியாகப் பார்க்கிறார்கள்'' எனச் சொல்லி, வீட்டிலிருந்து தப்பிக்க சுவரில் ஏறியிருக்கிறார். இந்த இரு போட்டியாளர்களுமே சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் `பிக் பாஸ்' வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About