அனுபவம்
நிகழ்வுகள்
‘டாடி... ஐ மிஸ் ஹெர் டாடி’ - எ பிக் பாஸ் பை கவுதம் மேனன் அண்ட் தமிழ் டைரக்டர்ஸ்
July 10, 2017
நல்லா இருக்கோ இல்லையோ, மக்களுக்குப் பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என எல்லாத்துலயும் டிரெண்டிங்ல இருக்குறது நம்ம விஜய் டிவியோட பிக் பாஸ் நிகழ்ச்சிதான் .தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொல்றது, தல பாட்டுக்கு ஆட சொல்றதுனு தினமும் விதவிதமான வேலைகளைக் கொடுக்கிறார் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர். ஒரு வேளை நம்ம தமிழ் சினிமா இயக்குநர்களையே பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கச் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்னு கீழே பார்ப்போமா?
பிக் பாஸ்
கௌதம் மேனன் :
விதிமுறை 1 :
போட்டியில் கலந்துகொள்ளும் 15 பேரும் இங்கிலீஷ்லதான் பேசி ஆகணும்னு சொல்லியிருப்பார்.
விதிமுறை 2:
மூச்சுக்கு முந்நூறு முறை எல்லாரும் அவங்களோட டாடியைப் பத்தி புகழ்ந்து பேசியே ஆகணும்னு ஸ்பீக்கர்ல சொல்லியிருப்பார்.
விதிமுறை 3:
எல்லாரும் அவங்களோட முன்னாள், இந்நாள் காதல் கதைகளை பி.ஜி.எம் ஒலிக்க சொல்லணும்னு சொல்லியிருப்பார்.
மிஷ்கின் :
இவருக்குக் கொடுத்த முப்பது கேமிராவையும் போட்டியாளர்களின் கால் மட்டுமே தெரியுற மாதிரி ஃப்ரேம் வச்சிருப்பார். ஆண் போட்டியாளர்களை மொட்டை அடிக்கச் சொல்லி கருப்புக் கலர் பேன்ட், சர்ட் கொடுத்து போட்டுக்கச் சொல்லியிருப்பார். பெண்களுக்கு மஞ்சள் புடவை கொடுத்திருப்பார். குத்து டான்ஸ் கட்டாயம் உண்டு.
வெங்கட் பிரபு :
பிக் பாஸ் செட்டையே கோவா அல்லது பாங்காக்லதான் போட்டுருப்பார். 15 போட்டியாளர்களில் கண்டிப்பா பிரேம்ஜியும் ஒருத்தரா இருப்பார். போட்டியாளர்களுக்குத் தினமும் டாஸ்க் கொடுக்கிறாரோ இல்லையோ, நிச்சயமாக பார்ட்டி கொடுத்திருப்பார். பிரேம்ஜி முதல் சுற்றிலே வெளியேற்றப்பட்டால் கூட நூறாவது நாளில் பிரேம்ஜியை ஜெயிக்கவச்சு டிவிஸ்ட் வச்சிருப்பார்.
ராஜேஷ்:
இந்த நிகழ்ச்சியைக் கண்டிப்பா சந்தானம்தான் தொகுத்து வழங்கியிருப்பார். அந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள பெட் ரூம், கிச்சன், ஏன் பாத்ரூம் கூட இல்லாம இருக்கலாம். ஆனா கண்டிப்பா ஒரு எலைட் பார் செட்டை ஸ்பெஷலா போட்டிருப்பார். போட்டியாளர்களுக்குள்ள எதுவும் பஞ்சாயத்து வந்தா அதைத் தீர்த்து வைக்க செலிபிரிட்டி நாட்டாமைகளாக ஆர்யாவையும் ஜீவாவையும் அப்பாயின்ட் பண்ணிருப்பார்.
பாலா :
டி.ஆர்.பி ஏத்துறதுக்காக போட்டியாளர்களை அழ வைக்க க்ளிசரினெல்லாம் வாங்கி கஷ்டப்படத் தேவையே இல்லை. இவரே குச்சியை வச்சு சாத்து சாத்துன்னு சாத்தி அழ வச்சுடுவார். வெள்ளையா இருக்குற போட்டியாளர்கள் எல்லாரையும் மேக் அப் போட்டு கருப்பா ஆக்கி இருப்பார். இன்னொரு முக்கியமான விஷயம் என்னென்னா எல்லாருக்குமே குருதிப்புனல் கமல் ஹேர் ஸ்டைல்தான்.
சரவணன் மீனாட்சி தொடரின் இயக்குநர் :
இவர் டைரக்ட் பண்ணா எல்லா ஆண் போட்டியாளர்களுக்கும் ஒரே பேர்தான் - சரவணன். எல்லா பெண் போட்டியாளர்களுக்கும் ஒரே பேர்தான் - மீனாட்சி. இவங்களுக்குள்ள நடக்குற மோதல், காதலை எல்லாம் காமிச்சுட்டு கடைசி எபிசோட்ல எல்லாரையும் எலிமினேட் பண்ணிட்டு புது சரவணன் மீனாட்சிகளை அறிமுகப்படுத்துவார். அது சீசன் 2ல வரும்.
மணிரத்னம் :
என்னதான் செட்ல கலர் கலரா லைட்டுங்க இருந்தாலும் ஜீரோ வாட்ஸ் பல்ப்பைத்தான் பயன்படுத்தியிருப்பார். அதுவும் ஆஸ்தான கேமராமேனான பி.சி ஶ்ரீராம்தான் ஒளிப்பதிவு பண்ணுவார். விளம்பர இடைவேளை இசைக்குக் கூட ரஹ்மான்தான் ட்யூன் போட்டிருப்பார். ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு வார்த்தைதான் பேசணும்னு உத்தரவு போட்டிருப்பார்.

0 comments