விண்டோஸ் மொபைல்களை இனி மியூஸியத்துக்குக் கொடுத்துவிடலாம்... சப்போர்ட்டை நிறுத்தியது மைக்ரோசாஃப்ட்!

ஆப்பிளும் ஆண்ட்ராய்டும்தான் மொபைல் உலகின் தல தளபதி என்றாலும், விண்டோஸ் மொபைல்களுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ரசிக...

ஆப்பிளும் ஆண்ட்ராய்டும்தான் மொபைல் உலகின் தல தளபதி என்றாலும், விண்டோஸ் மொபைல்களுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ரசிகர்களுக்கு ஒரு துக்கச் செய்தியை தந்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் மொபைல்களுக்கு, தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன் புதிய ஓ.எஸ் ஆன விண்டோஸ் 10-க்கு தொடர்ந்து சேவையை வழங்குவோம் என்கிறது மைக்ரோசாப்ஃட்.  ஆனால், உலகில் இருக்கும் விண்டோஸ் மொபைல்களில் விண்டோஸ் 8.1 அல்லது அதற்கு முந்தைய ஆப்ரேட்டிங் சிஸ்டமும் இன்னமும் இருக்கிறது.

மொபைல் பக்கமே இனி மைக்ரோசாஃப்ட் வராது என ஒரு பக்கம் கருத்துகள் எழ, “இல்லை இல்லை... புதிய அதிரடி திட்டங்களோடு திரும்ப வரும்” எனவும் டெக் ஆர்வலர்கள் சொல்லிவருகிறார்கள். இப்படி, பல லட்ச மொபைல்கள் பயனற்றுப்போகும் சூழலை உருவாக்கியவர்கள் வந்தாலும் ஜெயிக்க முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About