வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத ஜியோ... அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி பிளான்கள்!

வாடிக்கையாளர்கள் குறித்து கெவின் ஸ்டிர்ட்ஸ் கூறிய பொன்மொழி ஒன்று கார்ப்பரேட் உலகில் மிகப்பிரபலமானது. "உங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் வ...

வாடிக்கையாளர்கள் குறித்து கெவின் ஸ்டிர்ட்ஸ் கூறிய பொன்மொழி ஒன்று கார்ப்பரேட் உலகில் மிகப்பிரபலமானது. "உங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதையும், அதற்காக உங்கள் நிறுவனம் செய்த சிறப்பானதையும் தெரிந்துகொள்ளுங்கள். இவை இரண்டும் சந்திக்கும் புள்ளியில் கவனம் செலுத்துங்கள் போதும்" என்பதுதான் அந்தப் பொன்மொழி. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது இந்தப் புள்ளியில்தான் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. இலவசச் சலுகைகளால் இதுவரை வாடிக்கையாளர்களைக் கவர்ந்த அந்நிறுவனம், குறைந்த விலைக்கு நிறையப் பலன்களை அளிக்கும் பிளான்களைத் தற்போது அறிவித்துள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளர்களை இழந்துவிட அந்நிறுவனம் தயாராக இல்லை.

ஜியோவின் பிரைம் மெம்பரான வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த இலவச ஆஃபர்கள் விரைவில் முடிவடையப்போகின்றன. தொடக்கத்தில் 'ஜியோ சம்மர் சர்ப்ரைஸ்' என்ற பெயரில் வழங்கப்பட்டுவந்த சலுகையை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் அறிவுரைக்குப்பின் அந்நிறுவனம் நிறுத்திக்கொண்டது. அதன்பின் பிரைம் சேவையில் இணைந்தவர்களுக்கு, 'ஜியோ தன் தனா தன்' என்ற பெயரில் மற்றொரு சலுகை வழங்கப்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இவற்றில் இணைந்த பிரைம் வாடிக்கையாளர்களுக்கு, இந்த மாதத்தோடு இந்த இரண்டு ஆஃபர்களுக்கான வேலிடிட்டி நிறைவடைகிறது. இதையடுத்து ஏதாவதொரு டேட்டா பிளானில் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே வாடிக்கையாளர்களால், தொடர்ந்து அந்நிறுவனத்தின் சேவைகளைப் பெறமுடியும்.

ஜியோவின் புதிய பிளான்கள்

அதிரடி ஆஃபர்களுக்குப் பெயர்போன ஜியோ நிறுவனம், நேற்று தனது பிளான்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருமுறை ரீசார்ஜ் செய்யும்போதும் அதன் வேலிடிட்டி 28 நாள்களுக்கு மட்டுமே இருக்கும் என ஜியோ நிறுவனம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் புதிய அறிவிப்பின்படி, வேலிடிட்டி நாள்கள் மற்றும் டேட்டா சலுகைகள் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, ரூ.309 பிளானின் கீழ் வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்வதாக வைத்துக்கொள்வோம். ஜியோவின் முந்தைய அறிவிப்பின்படி நாளொன்றுக்கு 1 GB அளவிலான 4G டேட்டா மொத்தம் 28 நாள்களுக்கு வழங்கப்படும். ஆனால், ஜியோவின் தற்போதைய மாற்றத்தின்படி, நாளொன்றுக்கு 1 GB அளவிலான 4G டேட்டா மொத்தம் 56 நாள்களுக்கு வழங்கப்படும். மேலும், ஒரு நாளைக்கான டேட்டா அளவு முடிந்தபின்னரும், 128 kbps என்ற டேட்டா ஸ்பீடில் அன்லிமிட்டட் டேட்டாவைப் பயன்படுத்த முடியும். ஒரு மாதத்துக்கு மட்டுமே இருந்த பலன்கள், தற்போது இரண்டு மாதங்கள் வரை பிரைம் வாடிக்கையாளர்களுக்காக நீட்டிக்கப்பட்டிருக்கின்றன. ரூ.309/- முதல் ரூ.9,999/- வரையிலான அனைத்து ப்ரிபெய்ட் டேட்டா பிளான்களுக்கும் வேலிடிட்டி நாள்கள் மற்றும் டேட்டா சலுகைகள் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.

முதல்முறையாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே இந்தச்சலுகை பொருந்தும் என ஜியோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகையில் இணைந்தவர்களுக்கு இந்தச்சலுகை பொருந்துமா என்பதை அந்நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About