'ஓவியாவுக்கு அளித்த வாக்கை எனக்கு அளித்திருந்தால்...': அன்புமணி ராமதாஸ் கலகல!

பிக் பாஸ்தான் தற்போது அரசியல் கட்சித் தலைவர்களும் விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது. கமல், 15 பிரபலங்கள், 100 நாள்கள் என்று பிரமாண்டங்களுக்க...

பிக் பாஸ்தான் தற்போது அரசியல் கட்சித் தலைவர்களும் விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது. கமல், 15 பிரபலங்கள், 100 நாள்கள் என்று பிரமாண்டங்களுக்கு பஞ்சமில்லாமல் தொடங்கியது பிக் பாஸ். அதே நேரத்தில் சர்ச்சைகளுக்கும் குறைவு இல்லை. அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்ததால், கமலே செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.

இதனிடையே, பிக் பாஸில் கலந்துகொண்டுள்ள காயத்ரி ரகுராம், அந்த நிகழ்ச்சியில் 'சேரி பிஹேவியர்' என்று கருத்துக் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால், அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது ஒரு புறம் இருக்க அந்த நிகழ்ச்சியில் ஓவியா மற்றும் பரணியைக் காப்பாற்ற மட்டும் 1.5 கோடி மக்கள் வாக்களித்தனர்.

சமூக வலைதளங்களிலும் பிக் பாஸ் குறித்துதான் பரவலாக பேசப்படுகிறது. நிகழ்ச்சி குறித்து ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ், "ஓவியாவுக்கு ஓட்டு போட்ட 1.5 மக்கள், எனக்கு வாக்களித்திருந்தால் நான் மக்களை காப்பாற்றியிருப்பேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive