ரஜினியை ஏன் சந்தித்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

இதோ வரப்போகிறார், அதோ வரப்போகிறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் வருவதாக இல்லையே என்று தான் முணுமுணுப்புகள் கேட்கிறத...

இதோ வரப்போகிறார், அதோ வரப்போகிறார் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் வருவதாக இல்லையே என்று தான் முணுமுணுப்புகள் கேட்கிறது. அநேகமாக இந்த ஆண்டில் அரசியலில் நுழையப்போவது உறுதி என்றே அவரது சந்திப்புகளும் சொல்லி வருகின்றன. முக்கிய கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த பலரை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார். அவர்களிடம் அரசியல் குறித்த விவாதங்களையும் நடத்தி வருகிறார். 'காலா' படப்பிடிப்பு முடிந்து அவரது பிறந்த நாளுக்குள் கட்சியின் சின்னம் மற்றும் கொடி, பெயரை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவது தி.மு.க-வை பாதிக்குமா என்று அரசியல் ஆர்வலர்கள் பேசிக்கொண்டு இருக்கும் நிலையில்தான் தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ரஜினியை சந்தித்திருக்கிறார். இது அரசியலில் பெரும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. அதுவும் சந்தித்தவர் சாதாரண எம்எல்ஏ., இல்லை. மூன்று தலைமுறையாக கலைஞர் குடும்பத்தோடு பழகியவர்கள். அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக தி.மு.க-வில் இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் ரஜினியைப் பார்த்துள்ளார். ஸ்டாலினின் வலது கையாகவும், திருவெறும்பூர் தி.மு.க எம்எல்ஏ-வாகவும் இருக்கும் மகேஷ் பொய்யாமொழி திடீரென்று ரஜினியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஏன் இந்த சந்திப்பு என்று மகேஷைக் கேட்டால் 'இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு' என்று வழக்கமான பல்லவியை சொன்னார். ஆனாலும் இது ரஜினியின் நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள என்றான சந்திப்பு என்கிறார்கள். இல்லை இல்லை இப்போதைக்கு அரசியலுக்கு வரவேண்டாம் என்ற சமாதான தூது என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ கத்திரிக்கா முத்தினால் கடைத்தெருவுக்கு தான் வரணும்னு சொல்வாங்க. ரஜினி மேட்டர் மட்டும் இப்படி முத்திக்கொண்டே போகிறதே..

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About