சினிமா
நிகழ்வுகள்
உங்கள் பேவரட் நடிகர்கள் எந்த இயக்குனரின் இயக்கத்தில் அதிக படங்கள் நடித்துள்ளார்கள் தெரியுமா? ஸ்பெஷல்
October 29, 2017
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என்று சில பேவரட் கூட்டணி இருக்கும். அப்படி தல இவருடன் இணைந்தால் சூப்பர் ஹிட், தளபதி இவருடன் இணைந்தால் மெகா ஹிட் என ரசிகர்கள் நினைப்பார்கள், அது ஒரு புறம் இருந்தாலும் முன்னணி நடிகர்கள் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை எந்த இயக்குனர்களின் இயக்கத்தில் அதிக முறை நடித்துள்ளார்கள் என்ற லிஸ்ட்டை பார்ப்போம்.(இவை ஹீரோவாக நடித்தது மட்டும் தான், கெஸ்ட் ரோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை).
ரஜினி-முத்துராமன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குனர் முத்துராமனும் இணைந்து 23 படங்கள் வரை கொடுத்துள்ளனர், இதில் ஒரு சில ஹிந்தி படங்களும் அடங்கும்.
கமல்ஹாசன்- கே.பாலசந்தர்
கமல்ஹாசனும், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கூட்டணியில் சுமார் 19 படங்கள் வரை வந்துள்ளது, இதில் 4 படங்களுக்கு மேல் ஹிந்தி படங்களும் இடம்பெறுகின்றது.
ரஜினி, கமல் இருவருமே 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளதால் முடிந்தளவு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
விஜய்-எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் தற்போது முருகதாஸ், அட்லீ என கலக்கினாலும் ஆரம்பத்தில் தன் தந்தையின் இயக்கத்தில் தான் பல படங்களில் நடித்தார், இதில் நாளைய தீர்ப்பு, செந்தூரபாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, செல்வா, ஒன்ஸ் மோர், நெஞ்சினிலே, சுக்ரன் ஆகிய படங்கள் அடங்கும்.
அஜித்-சரண்
அஜித் இயக்குனர் சிவா இயக்கத்தில் 3 படங்கள் நடித்துள்ளார், அடுத்தப்படமும் அவருடன் என்றால் சரண் சாதனையை சமன் செய்துவிடுவார், ஆம், அஜித்-சரண் கூட்டணியில் இதுவரை காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.
விக்ரம்
விக்ரம் பெரும்பாலும் பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார், இதில் குறிப்பாக தரணி, ஏ.எல்.விஜய், ஷங்கர், பாலா ஆகியோருடன் இரண்டு முறை இணைந்து பணியாற்றியுள்ளார்.
சூர்யா-ஹரி
சூர்யாவும் பல இயக்குனர்களுடன் பணிபுரிந்தாலும் அவரின் பேவரட் ஹரியுடன் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்2, சிங்கம்3 என 5 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
தனுஷ்
தனுஷ் செல்வராகவன், ஜவஹர் இயக்கத்தில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார், செல்வராகவனுடன் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார், அதே போல் ஜவஹருடன் குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் கொடுக்க, அடுத்து வெற்றிமாறனுடன் பொல்லாதவன், ஆடுகளத்தை தொடர்ந்து வடசென்னையில் இதை சமன் செய்யவுள்ளார்.
சிம்பு-கௌதம் மேனன்
சிம்பு குழந்தை நட்சத்திரமாக தன் அப்பாவின் பல படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவான பிறகு கௌதம் மேனனுடன் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளார், இதுவே அதிகம்.

0 comments