உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்...!

உலகில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன், தொப்பை. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க பலர் பலவற்றை முயற்...

உலகில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன், தொப்பை. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க பலர் பலவற்றை முயற்சித்திருப்பார்கள்.

இருப்பினும் எந்த பலனும் கிடைத்ததாக இருக்காது. ஆனால் தினமும் தேன் மற்றும் பட்டை நீரை குடித்து வந்தால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் பருமனானது குறைந்துவிடும் அதிலும் இதனை இரவு மற்றும் காலையில் குடித்து வர வேண்டும்.

இப்போது அந்த தேன் மற்றும் பட்டை நீரை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.

 உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர் .

தேவையான பொருட்கள்:

தேன் - 2 டீஸ்பூன்

 பட்டை - 1 டீஸ்பூன்

 தண்ணீர் - 1 கப்

செய்முறை:

 * முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்க கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

 * பின் அதில் பட்டையை போட்டு, வெதுவெதுப்பாகும் வரை தனியாக மூடி வைக்க வேண்டும்.

 * நீரானது வெதுவெதுப்பானதும், அதில் தேன் சேர்த்து கலந்து, அதில் பாதியை இரவில் படுக்கும் முன்பும், மீதியை மூடி வைத்து, மறுநாள் காலையில் எழுந்தும் குடிக்க வேண்டும்.

குறிப்பு: காலையில் குடிக்கும் போது அதனை சூடேற்ற வேண்டாம்

மேலும் பல...

1 comments

  1. பட்டை என்றால் என்ன பட்டை?

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About