த்ரி மஸ்கிடோஸ்! தன் மதிப்பை தானே குறைத்துக் கொண்ட உதயநிதி?

நாளை வெளியாகிறது ‘இப்படை வெல்லும்!’ உதயநிதி- மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியிருக்கிறார். கதை சொல்லப...

நாளை வெளியாகிறது ‘இப்படை வெல்லும்!’ உதயநிதி- மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியிருக்கிறார். கதை சொல்லப் போன இடத்தில் உதயநிதிக்கு, மரண பீதியை காட்டிவிட்டாராம் இவர். ஏன்? வீட்டிலிருந்த பொருட்களே உடைந்து போகிற அளவுக்கு விழுந்து புரண்டு கதை சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்…

பல விஷயங்களில் கவுரவ் ஒரு கச்சா முச்சா பேர்வழி என்பதை இன்று நேற்றல்ல. அவர் படம் இயக்க வந்த நாளிலேயே புரிந்து கொண்டிருக்கிறது மீடியா. தன் முதல் பட ஆடியோ விழாவுக்கு இயக்குனர் அமீரை அழைத்திருந்தார் அப்போது. பேசும்போது, “இந்தப்படத்தில் நடிக்க அமீரை கேட்டேன். அவர் தப்பிச்சுட்டார். நடிக்க வந்திருந்தார்னா ரீடேக் ரீடேக்னு எடுத்து அவரை நல்லா வெறுப்பேத்தியிருப்பேன்” என்று மேடையிலேயே சொல்ல… படு குழப்பத்திற்கு ஆளானார் அமீர். “இந்த தம்பிக்கும் எனக்கும் முன்ன பின்ன பழக்கம் இல்ல. அப்படியிருக்கும் போது ஏன் என்னை வெறுபேற்ற நினைச்சார்னு தெரியலையே” என்றார் வேதனையோடு. கட்… விஷயத்துக்கு வருவோம்.

இந்தப்படத்தின் பிரஸ்மீட்டிலும் அதே போல உதயநிதியை சீண்டி அவமானத்திற்கு ஆளாக்கிவிட்டார். “என் படத்தில் நடிக்கிறேன்னு அக்ரிமென்ட் போட்டுட்டு நடுவுல ரெண்டு படத்துல நடிச்சுட்டாரு உதயநிதி. அது மட்டுமில்ல. என் படத்தோட ஷுட்டிங் ஸ்பாட்ல வேற படத்தில் நடிக்கறது பற்றி பேசிட்டு இருப்பாங்க சூரியும் உதயநிதியும். எனக்கு கடுப்பா வரும்” என்றெல்லாம் பேசிக் கொண்டே போக, உதயநிதி முகத்தில் செம சூடு.

கவுரவ் அதோடு விட்டாரா? “உதயநிதி, சூரி, வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் மூணு பேரையும் நான் த்ரி மஸ்கிடோஸ்னுதான் கூப்பிடுவேன்” என்று சொல்ல, இன்னும் ஷாக் ஆனது உதயநிதி பேஸ்கட்டு.

இளைய தலைவா… என்று லட்சோப லட்சம் தொண்டர்கள் ரத்த தானமே செய்கிற அளவுக்கு வெறிகொண்டு அன்பு செலுத்தும் ஒருவரை, மஸ்கிடோஸ் என்று அழைத்ததோடு மட்டுமல்லாமல் அதை ஸ்டேஜில் சொல்லவும் செய்கிறார் என்றால்,

கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொண்டாரோ உதயநிதி?

இருக்கும்… இருக்கும்…

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About