அனுபவம்
நிகழ்வுகள்
தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் புயல் முத்திரைகள்!
November 08, 2017
அம்மாவும் நீயே எனப் பாட்டுப்பாடி அறிமுகம் ஆனவர் இன்று மொபைல் ஆப் வெளியிட்டு அரசியல் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் கமல். சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மாற்றங்களை அசாதாரணமாகக் கடந்த கலைஞன். சினிமாவின் எல்லாத் துறைகளையும் முறையாகக் கற்ற கமல், திரை உலகில் எடுக்காத அவதாரமே இல்லை. அதன் உச்சம் ‘தசாவதாரம்’. ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் வேறுபாடுகாட்டுவதே கடினமாகிவிட்ட நிலையில் 10 வேடங்கள். பத்தும் 10 விதமாக இருக்கும். நடிப்பின் உச்சம் தொட்ட கமல் எனும் நடிகன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ....
முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர். இவர் திரைஉலகிற்கு வந்து 58 வருடங்கள் ஆகின்றன.
‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும்கூட, தனது குழந்தைப் பருவத்து நடிப்பில், பெரிய நடிகர்கள் யாருக்கும் மாஸ்டர் கேரக்டரில் நடித்ததே இல்லை!
இவர் நடித்த படங்களைப் பாராட்டி பாலச்சந்தர் எழுதும்போது 'மை டியர் ராஸ்கல்' என்றுதான் விழிப்பார்!
'கன்னியாகுமரி' எனும் ஒரு மலையாளப் படத்தில்தான் முதன்முதலில் கதாநாயகனானார் கமல்.
முதல் படத்திற்கே சிறந்த நடிகருக்கான 'ஃப்லிம் பேர் விருது' பெற்றார்.
தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் 1975 ல் வெளியான 'அபூர்வ ராகங்கள்' , 1976 ல் வெளியான 'மன்மத லீலை' படங்கள் கமல் ஹாசனுக்குத் திருப்புமுனையாக அமைந்தன.
இதுவரை இவரின் ஏழு படங்கள் ' ஆஸ்கர் விருது'க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
1974 முதல் 1978 வரையிலான நான்கு வருடங்களில் ஆறு 'ஃப்லிம் பேர் விருது'களைப் பெற்று தமிழ் சினிமாவைத் தன் பக்கம் திரும்ப வைத்தார் கமல்.
கமல் மொத்தம் 19 'ஃப்லிம் பேர் விருது' களைப் பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான நான்கு தேசிய விருதுகளும், ஒன்பது மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
‘தசாவதார’த்தில் பத்து வேடங்கள் ஏற்று நடித்தது மட்டுமல்லாமல், பத்து விதமாக டப்பிங்கும் செய்தார்.
எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்', சிவாஜிக்கு 'சவாலே சமாளி', ஜெயலலிதாவுக்கு 'அன்புத்தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்!
2003 ல் வெளியான ‘அன்பே சிவம்’ படத்தில் சுனாமி பற்றி பேசியிருப்பார் கமல். அவர் பேசியபோது சுனாமி என்ற வார்த்தை கூட நமக்குப் பரிட்சியமில்லை. ஆனால் 2004 டிசம்பரில் சுனாமியால் இந்தியா தத்தளித்தது.
2014 ஆம் ஆண்டில் உலகையே அச்சுறுத்தியது எபோலா வைரஸ். அந்த வைரஸ் பற்றி 2008 ல் வெளியான தசாவதாரம் படத்திலேயே பேசியிருப்பார் கமல்.
2015 மே மாதம் வெளியான ‘உத்தம வில்லன்’ படத்தில் 'எங்கு பார்த்தாலும் தண்ணீர்... எனக்கு மட்டும் குடிக்க இல்லையே' என்று வெள்ளத்தில் மிதந்துகொண்டே வசனம் பேசியிருப்பார். அதை நாம் அனைவரும் அந்த வருடத்தின் இறுதியிலேயே அனுபவித்தோம்.
கமல் மெட்ராஸ் பாஷை பேசிய 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்' ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்!
பாபர் மசூதி இடிப்பின்போது யதேச்சையாக டெல்லியில் இருந்த கமல். விஷயம் கேள்விப்பட்டதும் உடனடியாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, தமிழ்த் திரையுலகம் சார்பாக எதிர்ப்பைப் பதிவு செய்தார். பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக சினிமா உலகிலிருந்து எழுந்த முதல் எதிர்க்குரல் கமலுடையது.
இவரிடம், 'காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழிக்க விருப்பம்?' என்று கமலிடம் அவர் முன்பு நடத்திய 'மய்யம்' பத்திரிகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கமல் சொன்ன பதில், 'காட்டில் இருந்தால் நரி முகத்தில், கட்டிலில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்'!
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு ஆகிய எட்டு மொழிகளில் கைவந்த வித்தகர்!
அதிஅற்புதமான உலக சினிமாக்களின் டி.வி.டி. அணிவகுப்பு கமலின் ஹோம் தியேட்டர் கலெக்ஷனில் இருக்கின்றன!
பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதில் , தன் வஞ்சப் புகழ்ச்சி மற்றும் சொல்லாடல் மூலம் சோசியல் மீடியாவை அதிரவைத்து பல ரசிகர்களை அள்ளி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments