"கமல் தனி நபராக வந்தால் ஏற்போம்" – ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராமத்தினர் கருத்து

”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் என இல்லாமல் தனி ஒருவராக போராட்டக் களத்திற்கு வந்தால் நடிகர் கமலை ஏற்றுக் கொள்வோம்” என தூத்துக்குடியில் ஸ்டெர...

”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் என இல்லாமல் தனி ஒருவராக போராட்டக் களத்திற்கு வந்தால் நடிகர் கமலை ஏற்றுக் கொள்வோம்” என தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகாப் போராடி வரும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதியை ரத்து செய்யவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் கடந்த 24 -ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்குக் மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். பேரணி மற்றும்பொதுக்கூட்டம் நடத்திட  நீதிமன்றம்  அனுமதி அளித்தும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை காரணமாகச் சொல்லி, பேரணிக்கு அனுமதி மறுத்து, பொதுக்கூட்டத்துக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்தது.

ஸ்டெர்லைட் போராட்டம்

இதற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. மினி பஸ்கள், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, திரையரங்குகள் ஆகியவை இயங்கவில்லை. சுமார்  இரண்டாயிரம் பேர் மட்டும் வருவார்கள் என நினைத்த காவல்துறையினர், ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதும் செய்வதறியாது திணறிப்போயினர்.  மாணவர்கள், திருநங்கைகள், வியாபாரிகள், கிறிஸ்தவ சகோதரிகள், மீனவர்கள், விவசாயிகள் எனப் பல தரப்பினரும் ஆலைக்கு எதிராக மேடையில் தங்கள் எதிர்ப்பு கருத்தை அள்ளி வீசினார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என குமரெட்டியாபுரம் கிராமத்தினர்  தங்களது கிராமத்தில் தொடர்ட்ந்து போராட்டம் நடத்திக் கொண்டேதான் உள்ளனர்.

இந்நிலையில், “ஸ்டெர்லைட் போராட்டத்தில்  தமிழக மக்களும்  ஊடகங்களும் பங்கு பெற வேண்டும். இந்த ஆலைக்கு எதிரான இப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் வருவேன்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து கிராம மக்களிடம் பேசினோம்,  “எந்தக் கட்சியையும், அதனைச் சார்ந்த அரசியல்வாதிகளையும் போராட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறோம்.  இது மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். இதில் கட்சிக்காரர்களுக்கு  வேலை இல்லை. நடிகர் கமல்,  ஸ்டெர்லைட் போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன் எனக் கூறி உள்ளார். ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இல்லாமல், தனி ஒருவராக களத்துக்கு வந்தால்  அவரை வரவேற்போம், ஏற்றுக்கொள்வோம்.” என்றனர்.  

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About