இயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா கிறிஸ்த்தவர்களின் கடவுளான இயேசுவை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் ஒ...

இசையமைப்பாளர் இளையராஜா கிறிஸ்த்தவர்களின் கடவுளான இயேசுவை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி , “உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை. பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்” என்று கூறியுள்ளார்.

இது கிறிஸ்த்தவர்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது என கூறி இளையராஜாவின் வீட்டின் முன் போராட்டம் நடத்த சிலர் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About