தளபதி விஜய்யின் மீது கோபம் கொண்ட சத்யராஜ்

சத்யராஜ் ரஜினியே வில்லனாக அழைத்தும் நடிக்க மறுத்தவர். ஆனால், விஜய் நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். அதை ...

சத்யராஜ் ரஜினியே வில்லனாக அழைத்தும் நடிக்க மறுத்தவர். ஆனால், விஜய் நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.

அதை தொடர்ந்து தலைவா படத்தில் அவருக்கு தந்தையாகவும் நடித்திருப்பார், இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன் விஜய்யு, சத்யராஜும் ஒரு ஆடியோ விழாவில் கலந்துக்கொண்டனர்.

அப்போது சத்யராஜ் பேசுகையில் ‘நான் பிரமாண்டமாக ஒரு வீடு கட்டினேன், என்னுடைய வீட்டில் என் மகன் என் புகைப்படத்தை தானே மாட்டியிருக்க வேண்டும்.

அவன் ரூம் முழுவதும் விஜய் தம்பியின் புகைப்படம் தான் உள்ளது, அதை பார்த்ததுமே எனக்கு விஜய் மீது கோபம் வந்தது’ என ஜாலியாக சத்யராஜ் பேசினார்.

சத்யராஜ் பேசியதை விஜய் மிகவும் சந்தோஷமாக பார்க்க, அதோடு விஜய் உங்கள் ரசிகர்களை நீங்கள் பயனுள்ள வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அட்வைஸையும் சத்யராஜ் வழங்கினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About