நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து நலம்பெற தான் இறைவனிடம் பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த்...

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து நலம்பெற தான் இறைவனிடம் பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

`தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்’ என்ற படத்தில் நடித்து வரும் அமிதாப் இரவில் தூக்கமில்லாமல், ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருந்து சிறப்பு மருத்துவர்களும் ஜெய்ப்பூருக்கு விரைந்து அமிதாப்புக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஆன்மீக பயணமாக இமயமலை வட இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக கூறினார்.

மேலும் தான் இங்கு ஆன்மீக பயணமாகவே வந்துள்ளேன். அரசியல் குறித்து அதற்கான களத்தில் பேசலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About