திடீரென அரசியலுக்கு வந்த கமலினால் அது முடியாது! நடிகை கவுதமி அதிரடி

ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என நடிகை கவுதமி அதிரடியாக கருத்து வெளியிட்ட...

ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என நடிகை கவுதமி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, நடிகை கவுதமி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தமிழக அரசியல் தொடர்பாகவும், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்தும் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவக்குப் பின் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான்.

கமல் மற்றும் ரஜினி திடீரென அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை. இந்த வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருச்சியில் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழந்தது வேதனை அளிப்பதாகவும் கவுதமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About