பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!

ஜூலி என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பல தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமாகிவிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில...

ஜூலி என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பல தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமாகிவிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட போது நல்ல பெயர் இருந்தது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கேலி கிண்டலுக்கு ஆளானார். அதையும் பொறுமையாக சமாளித்து எதிர்கொண்டார். அவருக்கு சில விளம்பர வாய்ப்புகளும் வந்தது.

சில இடங்களை அவரை விழாவிற்கு கூட சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். அதோடு படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றது. மன்னர் வகையறா படத்தில் சின்ன ரோலில் கிளைமாக்ஸில் நடித்தார்.

இதனை தொடர்ந்து உத்தமி ஜுலி என்ற படத்திலும் அவர் கமிட்டானார். சமீபத்தில் நீட் தேர்வுக்காக உயிர் விட்ட அனிதாவின் வாழ்க்கையை படத்தில் அனிதாவாக நடிக்கிறார் என போஸ்டர் வெளியானது.

இதனை உறுதிப்படுத்திய தயாரிப்பாளர் ராஜா, ஜூலி அனிதாவாக மாறிவிட்டார். அனிதா வீடியோக்களை பார்த்துவிட்டு ஜூலி அழுதுவிட்டார். அவர் தான் இதற்கு சரியாக இருக்கும் என கூறினார்.

முதலில் லெட்சுமி மேனனை நடிக்க வைக்கலாம் என பேச்சு வந்ததாம். பின் ஜூலியை கருத்தில் கொண்டு இதை செய்தோம் போஸ்டருக்கே நல்ல வரவேற்பு என அவர் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About