அட… நிஜமாகவே தமிழ்நாட்ல ஒரு புரூஸ்லீ!

‘ஏதாவது புதுசா செய். இல்லேன்னா நீ பழசாதான் இருக்கணும்’ என்கிற எச்சரிக்கையை எடுத்துக் கொள்ளாவர்களுக்கு ஈறும் பேனும்தான் தேறும். அரைத்த மாவைய...

‘ஏதாவது புதுசா செய். இல்லேன்னா நீ பழசாதான் இருக்கணும்’ என்கிற எச்சரிக்கையை எடுத்துக் கொள்ளாவர்களுக்கு ஈறும் பேனும்தான் தேறும். அரைத்த மாவையே அரைக்கிறவர்களுக்கு கோடம்பாக்கத்தில் குஸ்கா கூட கிடைக்காது என்கிற புத்தி வரும்போதுதான், தானாகவே யோசிக்கிறார்கள். அப்படியொரு யோசிப்புதான் புருஸ் லீயை மீண்டும் கொண்டு வந்தது.

கோடம்பாக்கத்தில் சுமார் 20 வருஷமாக வாய்ப்புக்காக அலைந்த முளையூர் ஏ சோனை, சம்திங் புதுசு என்கிற கொள்கைக்கு வந்ததும்தான் வாய்ப்பு கதவை தட்டியது. புருஸ்லீயை வைத்து ஒரு ஆக்ஷன் படம் எடுப்பது. அதற்காக புருஸ் லீ மாதிரியே ஒரு நபரை பிடிப்பது. இந்த நோக்கத்தில் அலைய ஆரம்பித்த சோனைக்கு, பசுஞ்சோலையாக கண்ணில் சிக்கினார் ஷான்.

ஆஹா… கண்டேன் சீதையை ரேஞ்சில் அவரை கப்பென்று அமுக்கினார். ஆச்சர்யம் என்னவென்றால், இந்த ஷான் வரும்போதே கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி, புரூஸ்லியின் வெறியோடுதான் திரிந்து கொண்டிருந்தார்.

அதற்கப்புறம் நடந்ததெல்லாம் மேஜிக். மெலடி ட்யூன்களுக்கு பெயர் போன சவுந்தர்யனை இசையமைப்பாளராக புக் பண்ணினார். முதல் வேண்டுகோளே, “சார்… நமக்கு இப்ப இருக்கிற பாட்டு வேண்டாம். எய்ட்டீஸ்க்கு போயிடலாம்” என்பதுதான். தன் மேஜிக்கை பாடல்களில் காட்டிவிட்டார் சவுந்தர்யன். ஒன்றிரண்டு பாடல்களை திரையிட்டார்கள். கண்ணை மூடிக் கேட்ட நம்மை எய்ட்டீஸ்சை நோக்கிய பயணம் அப்படியே அள்ளிக் கொண்டு போக… பாடல்களை மிஞ்சியது அதற்கப்புறம் நாம் பார்த்த பைட் காட்சிகள்.

வந்திட்டாரு புரூஸ்லீ. அவரை பயன்படுத்திக் கொள்வது கோடம்பாக்கத்தின் புத்திசாலித்தனம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About