‘மடங்களின் பிடியில் இருக்கும் 40000 ஏக்கர் நிலங்கள்’… பா ரஞ்சித்தின் இந்தப் பேச்சுதான் இவர்களைப் பதற வைக்கிறதா?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் கடைவீதியில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் டிஎம் மணி என்கிற உமர்பருக்கின் நினைவு நாள...

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் கடைவீதியில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் டிஎம் மணி என்கிற உமர்பருக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

தனது பேச்சில், “தமிழகத்தில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்ததும், புரையோடிக்கிடப்பதும் இந்த பகுதியில்தான். ஒருங்கிணைந்த இந்த தஞ்சை டெல்டா பகுதியில்தான். அதற்கு காரணம் நிலங்கள்தான்.

ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பார்கள். ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலம்தான் தமிழகத்தின் இருண்ட காலம். எத்தனையோ பேர் சொல்றாங்க ராஜராஜ சோழன் எங்க சாதி என்று. இங்குள்ள பறையர்கள் சிலர்கூட சொல்கிறார்கள் ராஜராஜ சோழன் எங்க சாதி என்று.

சத்தியமாக சொல்கிறேன் ராஜராஜ சோழன் என்னுடைய சாதியாக இருக்கவே முடியாது. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான்.

சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில்தான். 400 பெண்களை விலை மாதர்களாக மாற்றி மங்கலவிலாஸ் என வைத்துக் கொண்டு மிகப் பெரிய அயோக்கியத்தனம் செய்தது ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில்தான். 26 பெண்களை கோலார் தங்க வயலுக்கு விற்ற அயோக்கித்தன ஆட்சியும் ராஜராஜ சோழன் ஆட்சிகாலம்தான். சாதியம் தலை தூக்கியதும் அப்போதுதான். அதனால்தான் இருண்டகாலம் என்கிறோம்,” என்று பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

போலீசில் புகார்

ரஞ்சித்தின் இந்தப் பேச்சைக் கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர். ரஞ்சித்தின் பேச்சு இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகவும், சாதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும் தங்கள் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர்,

வலையுலகம் முழுக்க இப்போது ரஞ்சித் – ராஜராஜன் சர்ச்சைதான் பிரதான பேசுபொருளாக உள்ளது. பெரும்பாலானோர், ராஜராஜன் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவல்கள், பொன்னியின் செல்வன் புதினம் போன்றவற்றை ஆதாரமாக வைத்துப் பேசி வருகின்றனர். தலித் ஆதரவாளர்கள் ரஞ்சித் பேசியதில் தவறே இல்லை என்று வாதிடுகின்றனர்.

ராஜராஜ சோழன் தங்கள் சாதிக்காரர் என்று வெள்ளாளர், வன்னியர், உடையார், அகமுடையார், முதலியார், தேவர் என 8க்கும் மேற்பட்ட சாதிக்காரர்கள் சொந்தம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About