அனுபவம்
நிகழ்வுகள்
பொண்டாட்டி ரிமோட் தரமாட்டா, நேரத்தை மாத்துங்க பிக் பாஸ்: வினோத கோரிக்கை
June 11, 2019
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து வெளியான ஜிஃப் வீடியோவை பார்த்தவர்கள் வேண்டாம் பாஸ் தயவு செய்து மாத்துங்க என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. கடந்த சீசன்களை போன்று இல்லாமல் இந்த சீசன் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய சீசன்கள் இரவு 9 மணி முதல் ஒளிபரப்பானது. பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்பு ஏகப்பட்ட ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆவலை தூண்டுவார்கள். ஆனால் இம்முறை ஏன் ஒரேயொரு வீடியோவுடன் நிறுத்திக் கொண்டுள்ளார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.
நடிகர் சங்க தேர்தல்: என் வேட்புமனு தள்ளுபடியா?- ரமேஷ் கண்ணா கொந்தளிப்பு
இந்நிலையில் கமல் ஹாஸன் வெவ்வேறு முகபாவனைகள் காட்டும் ஜிஃப் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் நிகழ்ச்சியின் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்களோ 8 மணி வேண்டாம் பழையபடி 9 மணிக்கே மாற்றிவிடுங்களேன் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்க ஊட்டு அம்மா அந்த நேரம் தான் ஒரு சீரியல் பார்ப்பார், அதனால் ரிமோட் கிடைக்காது பாஸ். எனவே, எங்களின் பரிதாப நிலையையும் புரிந்து கொண்டு பிக் பாஸ் 3 ஒளிபரப்பாகும் நேரத்தை மாற்றுங்கள் என்று பாவப்பட்ட சில கணவன்மார்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜிஃப் வீடியோவை பார்த்த சிலரோ, ஆக இந்த சீசனில் கமல் ஹாஸனை கத்தி, கதறவிடப் போகிறீர்களா, அதை தான் இப்படி சூசகமாக தெரிவித்துள்ளீர்களா என்று கேட்டுள்ளனர். எப்படி போனாலும் மடக்கினால் பாவம் பிக் பாஸ் என்ன தான் செய்வார்?.
இந்நிலையில் சிலரோ மார்க்கெட் இல்லா பிரபலங்களுக்கே வாய்ப்பு கொடுக்கிறீர்களே, நிகழ்ச்சி பார்க்கும் எங்களுக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நிகழ்ச்சியை பார்க்க மட்டும் சாதாரண மக்களாகிய நாங்கள் வேண்டும், போட்டியாளர்களாக வேண்டாமா என்று சிலர் காட்டமாக கேட்டுள்ளனர்.
பிக் பாஸ் இது வெறும் ஷோ அல்ல நம் வாழ்க்கை என்று கமல் ஹாஸன் தெரிவித்ததை தான் ஜீரணிக்க முடியவில்லை. இது வெறும் ஷோ தான் வாழ்க்கை இல்லை என்பது தெரிந்தும் கமலையே மாத்தி பேச வைத்துவிட்டார்களே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

0 comments