அனுபவம்
நிகழ்வுகள்
நகைச்சுவைக்கு பெயர் போன க்ரேஸி மோகன் நிஜத்தில் இப்படிப்பட்டவரா? பிரபலம் கூறிய தகவல்
June 11, 2019
வசனங்களுக்கு, குறிப்பாக நகைச்சுவை வசனங்களுக்கு பெயர் போனவர் கிரேஸி மோகன். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று காலை திடீர் மாராடைப்பால் இயற்கை எய்தினார்.
இந்நிலையில் இவரது படங்கள் பலவற்றில் நடித்துள்ள டெல்லி கணேஷ் இவரை பற்றி பேசுகையில், கிரேஸி மோகனின் வசனங்கள் நகைச்சுவையாக இருந்தாலும் நிஜத்தில் அவர் மிகவும் அமைதியான மனிதர். நகைச்சுவைக்காக வசனம் எழுதி வந்தார், திடீரென ஒருநாள் இலக்கியத்திற்காக எழுத ஆரம்பித்தார். நான், எப்படி வெண்பா பற்றியெல்லாம் எழுதுகிறாய்? என கேட்டதற்கு மேலே கையை காட்டி எல்லாம் அவன் செயல் என கூறினார்.
முதன்முதலில் தனது நண்பர்கள், சகோதர்களை எல்லாம் வைத்து சொந்தமாக கிரேஸி க்ரியேஷன் என்ற பெயரில் ஒரு நாடக ட்ரூப் ஆரம்பித்தார். அதிலிருந்து தான் அவரது பெயருடன் கிரேஸி என்ற பெயர் சேர்ந்து கொண்டது என புதிய தகவல்களை கூறினார், டெல்லி கணேஷ்.

0 comments