சுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சுட்டு பிடிக்க உத்தரவு. அந்த படத்தை போலவே இதுவும...

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சுட்டு பிடிக்க உத்தரவு. அந்த படத்தை போலவே இதுவும் வெற்றி பெற்றதா? பார்ப்போம்.

கதைக்களம்

ஒரு தனியார் வாங்கியில் படத்தின் ஆரம்பத்திலேயே விக்ராந்த், சுசீந்திரன் ஒரு வங்கியில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கின்றனர். இவர்களை மிஷ்கின் தன் போலீஸ் படையுடன் துரத்துகின்றார்.

அவர்கள் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் செல்கின்றனர். எப்படியாவது விக்ராந்த், சுசீந்திரவை பிடித்துவிட வேண்டும் என மிஷ்கின் அவர்களை நெருங்க, நெருங்க, கடைசியில் அவர்களை பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ராம்பிரகாஷ் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர், இரண்டு, மூன்று கதைகளை ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து அனைவரையும் கவர்ந்தார், அதேபோல் இந்த படத்தின் முதல் காட்சியிலேயே தீ பற்றிக்கொள்கின்றது.

அதற்கு அடுத்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு தான், அதிலும் மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரனை பிடிக்க நெருங்கும் போது நமக்கே பதட்டம் வந்துவிடுகின்றது.

படத்தின் சேஸிங் காட்சிகள் நன்றாக இருந்தாலும், அங்கு நடக்கும் விஷயங்களை லைவ் கவரேஜ் செய்யும் மீடியாக்காரர்கள் என்று காட்டுவது இன்னும் எத்தனை படத்தில் இதையே பார்ப்பது என்பது போல் தோன்ற வைக்கின்றது.

படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவும், அதுவும் வேகவேகமாக ஓடும் காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளரும் ஓடியது மட்டுமில்லாமல், நம்மையும் கூட்டி ஓடுகின்றார். சூப்பர்.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை செம்ம விறுவிறுப்பாக செல்கின்றது.

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

ஒரு சில காட்சிகள் நாடகத்தன்மையுடன் இருப்பது.

மொத்தத்தில் லாஜிக் இல்லை என்றாலும் விக்ராந்த், சுசீந்திரன், மிஷ்கின் பரபரப்பான ஓட்டத்தில் நாமும் பங்கேற்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About