எங்க ஊருல ஏரி, குளம், குட்டையை காணோம்; தேடி ஓடும் சென்னை மக்கள்!

தமிழகத்தில் வழக்கத்தை விட தண்ணீர் பஞ்சம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. நீர்...

தமிழகத்தில் வழக்கத்தை விட தண்ணீர் பஞ்சம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. நீர் நிலைகளை முறையாக தூர்வாராததும், மழைநீரை சேமிக்காததும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மிக முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த சென்னை மாநகரம், நீர் நிலைகள் காணாமல் போனதால் வறட்சியான ஒருபகுதியாக மாறிவிட்டது.

ஒவ்வொரு கோடைக்காலத்திலும் குடிநீருக்காக சென்னை அலைமோதிக் கொண்டிருக்கிறது. அதுவும் இம்முறை நிலைமை படுமோசம். சென்னையை காலி செய்துவிட்டு, வெளியேறிவிடலாமா என்று எண்ணும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டுள்ளது.

கடந்த 1906ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னையில் 474 நீர்நிலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, வெறும் 43 நீர்நிலைகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி காணாமல் போன சில நீர்நிலைகள் குறித்து இங்கே காணலாம்.

1 - நுங்கம்பாக்கம் ஏரி(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள் ஆக்கிரமித்து காணப்படுகின்றன),
2 - தேனாம்பேட்டை ஏரி,
3 - வியாசர்பாடி ஏரி,
4 - முகப்பேர் ஏரி,
5 - திருவேற்காடு ஏரி,
6 - ஓட்டேரி,
7 - மேடவாக்கம் ஏரி,
8 - பள்ளிக்கரணை ஏரி,
9 - உள்ளகரம் ஏரி,
10 - போரூர் ஏரி,
11 - ஆவடி ஏரி,
12 - கொளத்தூர் ஏரி,
13 - இரட்டை ஏரி,
14 - வேளச்சேரி ஏரி(100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால் ஆக்கிரமித்து காணப்படுகிறது),
15 - பெரும்பாக்கம் ஏரி,
16 - பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
17 - கல்லு குட்டை பெருங்குடி,
18 - வில்லிவாக்கம் ஏரி,
19 - பாடிய நல்லூர் ஏரி,
20 - வேம்பாக்கம் ஏரி,
21 - பிச்சாட்டூர் ஏரி,
22 - திருநின்றவூர் ஏரி,
23 - பாக்கம் ஏரி,
24 - விச்சூர் ஏரி,
25 - முடிச்சூர் ஏரி,
26 - சேத்துப்பட்டு ஏரி (ஸ்பர் டாங்க் ரோடு அமைந்துள்ளது),
27 - செம்பாக்கம் ஏரி,
28 - சிட்லபாக்கம் ஏரி ,
29 - போரூர் ஏரி,
30 - மாம்பலம் ஏரி,
31 - கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
32 - சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
33 - சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்,
34 - ஆலப்பாக்கம் ஏரி,
35 - வேப்பேரி,
36 - விருகம்பாக்கம் ஏரி(தற்போது தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு),
37 - கோயம்பேடு சுழல் ஏரி(கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரயில் நிலையம்)
38 - அல்லிக் குளம் ஏரி(நேரு ஸ்டேடியம்)

இவ்வாறு சென்னை மாநகரில் காணாமல் போன நீர் நிலைகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. இப்படியொரு சூழலில் தண்ணீரை எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம். இனி வருங்காலங்களில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அவை முறையாக தூர்வாரப்பட வேண்டும். அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிக்க கட்டாயப்படுத்த வேண்டும். இதற்கு அரசும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About