கல்லீரல்ல கொழுப்பு தேங்கியிருக்கா?... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...

பழங்கள் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். அதனால் தான் நம் ஆரோக்கியத்தில் அது மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஆமாங்க இந்த பழங்கள் தான...

பழங்கள் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். அதனால் தான் நம் ஆரோக்கியத்தில் அது மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஆமாங்க இந்த பழங்கள் தான் நமக்கு வரும் நோயுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

அதில் புளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தினமும் குறிப்பிட்ட அளவில் புளியை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கொழுப்பு கல்லீரல் நோய்

இது கல்லீரலில் கொழுப்பு தங்குவதால் ஏற்படும் நோயாகும். இந்த கொழுப்புகள் கல்லீரல் முழுவதையும் ஆக்கிரமித்து அலற்சியை ஏற்படுத்தி கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கிறது. இந்த கல்லீரல் நோயை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் மூலம் சரி செய்யலாம்.

புளியம்பழம்

புளி ஒரு ஆரோக்கியமான மருந்துப் பொருள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புளி நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி சீரண சக்தியை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் மற்றும் அன்சேச்சுரேட் கொழுப்புகள் ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதே மாதிரி இது கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் சிறந்தது.

எப்படி சாப்பிடணும்?

புளியில் உள்ள பாதுகாப்பு மற்றும் நற்பண்புகள் கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவுகிறது. இது பித்த நீர் குழாய்களுக்கு சிகச்சை அளிக்கிறது. மேலும் பித்தபையை சுத்தப்படுத்தி கழிவுகளை வெளியேற்றுகிறது.

இந்த சுத்தப்படுத்தும் முறையால் கல்லீரலில் தங்கியுள்ள கொழுப்புகள் நீக்கப்பட்டு கொழுப்பு களின் அளவு குறைகிறது. எனவே புளியை கண்டிப்பாக உணவில் சேர்ப்பது நல்லது. 30 கிராம் புளியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற போட்டு பயன்படுத்துங்கள். இந்த தண்ணீரை தினமும் 3 கிளாஸ் குடித்து வாருங்கள்.

லெமன்

லெமன் ஒரு சுத்தப்படுத்தி ஆகும். இந்த லெமன் சாற்றை தினமும் தண்ணீரில் கலந்து குடித்து வருவதன் மூலம் கல்லீரல் கொழுப்பை நீக்கலாம்.

இந்த லெமனில் விட்டமின் சி சிட்ரிக் அமிலம் போன்றவை உள்ளது. இந்த லெமன் சீரண சக்தியை மேம்படுத்த நம் உணவுகளை அரைக்க பயன்படுகிறது. மேலும் இதன் அமில தன்மை கல்லீரலை பாதுகாக்கிறது.

பேரிக்காய்

பேரிக்காய் சுவைப்பதற்கு மட்டுமல்ல அதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இதில் அதிகளவில் ப்ரக்டோஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது நல்லது. இதில் கரையக் கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் உள்ளன. இது கொழுப்புகளை வெளியேற்றி சீரண சக்தியை மேம்படுத்துகிறது. இதில் பெக்டின் இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது.

தினமும் 2 பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான 20% விட்டமின் சி, 10%போலிக் அமிலம், விட்டமின் பி காம்ளெக்ஸ் மற்றும் விட்டமின் ஈ போன்றவைகள் கிடைக்கின்றன. இதன் ஆர்கானிக் அமிலம் வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. சீரண சுரப்பிகளை தூண்டுகிறது. கணையம் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் பேரிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள். ஆரோக்கியமாக வாழலாம்.
முலாம்பழம் மற்றும் பப்பாளி விதைகள்
முலாம்பழம் மற்றும் பப்பாளி விதைகள்

முலாம்பழம் மற்றும் பப்பாளி விதைகள் கல்லீரல் நோய்க்கு சிறந்தது. கல்லீரலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது. மேலும் கல்லீரல் செயல்பாடுகளாவன பித்தநீர் சுரப்பு, உணவில் உள்ள கொழுப்புகள் மற்றும் விட்டமீன்களை உறிஞ்சுதல், நச்சுக்களையும் தேவையற்ற கொழுப்புகளையும் நீக்க உதவி செய்கிறது.

எனவே ஒரு கிளாஸ் இந்த பழ பானத்தை குடித்து வந்தால் கொழுப்பு கல்லீரல் நோயிலிருந்து தப்பிக்கலாம்.

தேவையான பொருட்கள்

2 துண்டுகள் முலாம்பழம்

ஒரு கிளாஸ் தண்ணீர்

2 பப்பாளி விதைகள்

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக அரைக்கவும். இப்பொழுது இந்த பானத்தை வடிகட்டாமல் அப்படியே குடியுங்கள். உங்கள் கல்லீரல் சுத்தமாகி விடும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியும் கல்லீரலை சுத்தம் செய்ய பெரிதும் பயன்படுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடம்பை பாதுகாப்பதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது. இதிலுள்ள இயற்கையான பொருட்கள் அழற்சி எதிர்ப்பு தன்மையுடன் செயல்படுகிறது. மேலும் இதிலுள்ள அதிகப்படியான நீர்ச்சத்து நீர்த்தேக்கம், ஹைபர்டென்ஷன் மற்றும் யூரிக் அமிலத்தை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது.

இதில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், அயோடின், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே சீசன் சமயங்களிலாவது இதை வாங்கி சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு 7-8 பழங்கள் வரை சாப்பிட்டு வாருங்கள்.

இதைக் கொண்டு லெமன் ஜூஸ் கலந்து ஸ்மூத்தி கூட தயாரித்து பருகலாம்.

இந்த பழங்களை எல்லாம் உங்கள் உணவில் சேர்த்து கொண்டு கல்லீரல் நோய்க்கு பை பை சொல்லுங்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About