பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன இருக்கிறது தெரியுமா? நீங்கள் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் இருக்கிறதாம்...!

பிக் பாஸ் இந்த வார்த்தை கடந்த இரண்டு ஆண்டாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தினமும் ஒருமுறையாவது உச்சரிக்கும் வார்த்தையா...

பிக் பாஸ் இந்த வார்த்தை கடந்த இரண்டு ஆண்டாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தினமும் ஒருமுறையாவது உச்சரிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது.

முதன் முதலாக அதிரடியாக நடிகர் கமல் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்ற செய்தி வந்ததும் பலருக்கு பெரும் அதிர்ச்சி. கமல் எப்படி இதற்கு ஒப்பு கொண்டார் என்று.

ஆனால் இந்த நிகழ்ச்சி வந்ததற்கு பின்பு தான் தெரிந்தது. கமல் இதற்கு ஒப்பு கொண்டதற்கான காரணம் சில நபர்களை ஒரு வீட்டிற்குள் அனுப்பி அவர்களை செல்போன் இல்லாமல், வெளிஉலகம் தெரியாமல் அங்கேயே வாழ வைத்து அவர்கள் செய்வதை படம் பிடித்து வெளிஉலகிற்கு காட்டும் நிகழ்ச்சி தான் இது.

இது கேட்க சாதாரணமாக இருந்தாலும், பார்க்கும் போது அவ்வளவு சாதாரணமாக இல்லை. உள்ளே அவர்கள் போடும் சண்டைகள், சச்சரவுகள், போட்டிகள் எல்லாம் வெளி உலகில் பெரும் அளவிற்கு வைரலாக பரவியது. முதல் சீசனில் நடிகை ஓவியாவிற்காக ஓட்டு மொத்த தமிழகமுமே குரல் கொடுத்தது.

இரண்டாவது சீசனும் பிரபலமாக பேசப்பட்டது. இந்நிலையில் வரும் 23ம் தேதி 3வது சீசன் துவங்கவுள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த செட் தற்போது முழுமையாக தயாராகிவிட்டது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபலங்கள் சென்று நிகழ்ச்சி துவங்கும் முன் ஒரு நாள் ஒத்திகையாக ஊடகத்தினர் சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் ஒரு நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த அனுபவத்தை பெற வாய்ப்பளித்தனர்.

அதன் படி அங்கு சென்று வந்த ஊடகவியலாளர்கள் வெளியில் வந்து தங்கள் பிக் பாஸ் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள். அதில் ஒருவர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை அதை கீழே காணலாம்.

"நாங்கள் 15 மீடியா ஆட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல தயாரானோம். முதலில் நாங்கள் கொண்டு சென்ற செல்போன், பர்ஸ், ஹெட்செட் அனைத்தையும் அவர்கள் வாங்கி வைத்துவிட்டார். பின்னர் எங்கள் கண்களில் கருப்பு துணி கட்டி எங்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து சென்றார்கள். கடந்த 2 சீசன்களில் உள்ள செட் டிசைனை விட இந்த முறை உள்ள செட் டிசைன் மிக அருமையாக இருந்தது. பின்னர் நாங்கள் வீட்டை சுற்றி பார்த்து விட்டு பேசி கொண்டிருந்தோம்.

சுமார் நாங்கள் வீட்டிற்குள் சென்று 1.30 மணி நேரத்திற்கு பிறகு எங்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. நாங்கள் டைனிங் டேபிளில் அமர்ந்து அதை சாப்பிட்டு முடித்தோம்.

அதன் பின் எங்களில் இருந்து ஒருவரை அணி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வந்தது. அந்த அணி தலைவர் பதவிக்காக 4 பேரை நாங்களே ஒரு மனதாக தேர்ந்தெடுத்தோம். அந்த 4 பேரில் யார் அணி தலைவர் என்பதற்கான போட்டி நடந்தது.

அதில் வெற்றிவேல் என்பவர் வெற்றி பெற்று எங்கள் அணி தலைவராக தேர்வானார். அதன் பின் வீட்டில் இருந்தவர்களுக்கான சில விளையாட்டுகள் நடந்தது. அதில் அனைவரும் ஆர்வமுடன் பங்குபெற்றோம். வீட்டிற்குள் சென்ற புதிதில் எங்களை கேமரா கண்காணிக்கிறது என்ற உணர்வு இருந்தது.

ஆனால் சில நிமிடங்களில் நாங்கள் அதை எல்லாம் மறந்துவிட்டு ஜாலியாக மாறிவிட்டோம். நாம் டிவியில் பார்க்கும் பிக்பாஸ் வீட்டின் கோணம் வேறு, உள்ளே அனுபவிக்கும் கோணம் வேறாக இருந்தது.

பொதுவாக பிக்பாஸில் நாம் உள்ளே இருப்பவர்கள் சண்டை போடுவதை பார்ப்போம். எங்களுக்கும் இருவருக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. ஆனால் இருவருமே அதை சீரியஸாக செய்யவில்லை. ஆனால் வாக்குவாதம் செய்ததை மற்றவர்கள் பார்த்தால் இவர்கள் சண்டை போடுவது போன்றே தோன்றியிருக்கும். அப்படிதான் பிக்பாஸில் நடப்பதை நாம் பார்க்கிறோம்.

பிக்பாஸ் வீட்டில் பகல் நேரத்தில் தூங்கினால் நாய் குரைக்குமா என்பதை பார்க்க நாங்களே ஒருவரை தூங்க அனுப்பினோம். ஆனால் நாய் குரைக்கவேயில்ல. நாங்கள் அதிக நேரம் காத்திருந்தும் குரைக்கவில்லை. சரி நாய் எல்லாம் நமக்கு குரைக்காது என நினைத்து இன்னொருவர் உண்மையிலேயே தூங்க சென்றார். அவர் தூங்குவதற்காக படுத்ததும் நாய் குரைத்து அவரை எழுப்பிவிட்டுவிட்டது. அந்த சம்பவம் மிக காமெடியாக நடந்தது.

ஒருநாள் இருந்துவிட்டு வந்த எங்களுக்கே இவ்வளவு அனுபவங்கள் இருக்கிறது என்றால் அங்கு நூறு நாள் இருக்க போகும் நபர்களுக்கு எவ்வளவு அனுபவங்கள் கிடைக்கும்? என்னை பொறுத்தவரை திருமணம் ஆகாமல், கமிட் ஆகாமல் இருப்பவர்கள் அந்த வீட்டில் இருப்பதை விட திருமணமாகி கிமட்மெண்டில் இருப்பவர்கள் அங்கு இருப்பது தான் உண்மையிலேயே பெரிய விஷயம்" என கூறினார்.

கடந்தாண்டில் கூட பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பவர்கள் குறித்த ஒரு உத்தேச பட்டியலாவது வெளியானது. இந்த முறை ஒரு சிலரின் பெயரே பேசப்பட்ட நிலையில் அவர்கள் எல்லாம் அதை மறுத்துவிட்டனர். இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் யாரெல்லாம் செல்ல போகிறார்கள். இந்த முறை என்னவெல்லாம் நடக்கபோகிறதோ என உங்களுக்கு ஆர்வமாக இருந்தால் , நீங்களும் ஒரு பிக்பாஸ் ரசிகனே... எது எப்படியோ இந்த முறை கமல் பிக்பாஸை எப்படி கொண்டு செல்கிறார் என பார்ப்போம் வாருங்கள்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About