இசைப்புயலையே மிஞ்சிய குரலுக்கு சொந்தகாரி பிரித்திகா... இப்போ எங்கே போனார்
February 20, 2018இந்தியாவில் மிகவும் பிரபலமாக ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் தான். இதில் வெற்றி பெரும் அ...
ஆனால் கடந்த வருடம் நடந்த சூப்பர் சிங்கரின் டைட்டிலை தட்டிச்சென்றவர் பிரித்திகா. கிராமத்திலிருந்து வந்து மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த இவரின் மெய்மறக்கச் செய்யும் குரலைக் கேட்டு பல பாடகர்களும் கண்கலங்கியுள்ளனர்.
மண்வாசனை மாறமல் பாடும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பல வெளிநாட்டில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் என்று கூறிவந்தனர். தற்போது திருவாரூரில் நடந்த பொங்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பிரபல பிண்ணனி பாடகர் ஆந்தோணி தேசனும் கலந்து கொண்டுள்ளார். இதுபோன்று பல கலைஞர்கள் உருவாகி பின் எங்கே செல்கின்றனர் என்பதே கேள்விக் குறியாக உள்ளது.
ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வேன்! சர்ச்சை இயக்குனர் அதிரடி அறிவிப்பு
February 20, 2018தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய God Sex and Truth என்ற படம் பற்றி சமீபத்தில் போலீஸ் அவரிடம் விசாரித்தது. 3 மணி நேரம் நடந்த விச...
இதுஒருபுறமிருக்க இந்த சர்ச்சை பற்றி ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி ராம் கோபால் மீது அவதூறாக பேசியுள்ளது. அந்த படத்தை அவர் இயக்கிதையையே மறுத்துவிட்டதாக செய்தி வெளியானது.
அந்த டிவியை சேர்ந்த ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரவுள்ளதாக தற்போது இயக்குனர் அறிவித்துள்ளார்.
''மாவட்டச் செயலாளர் பதவியா? எத்தனை 'சி' செலவு செய்வீர்...?" - ரஜினி மக்கள் மன்ற இன்டர்வியூ காட்சிகள்!
February 20, 2018'கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி மன்ற நிர்வாகியா? உங்களுக்கு மாவட்டத்தின் கௌரவப் பதவி தருகிறோம்!' என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள் ரஜினி...
பழைய நிர்வாகிகளிடம் ரஜினியின் ஆலோசகர்கள் கேட்கும் கேள்வி...
"தப்பா நினைக்கக் கூடாது... இது போர்க்களம். தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் முதலைகள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அரசியல் அவர்களுக்கு தொழில். போலீஸ் மற்றும் தாதாக்கள் அவர்கள் பக்கம். தேர்தல் நேரத்தில் அந்த அரக்கர்களை நீங்கள் சமாளித்து மாவட்ட அளவில் அரசியல் செய்ய வேண்டும். அதற்குத் தேவை.. முதலில், பணம். அடுத்து, ஆள் பலம். ஜாதி ஆதரவு. நீங்கள் எத்தனை 'சி' செலவு செய்வீர்?"
இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பழைய நிர்வாகிகள், "மன்றம் சார்பில் போஸ்டர் ஒட்டினோம். ஏதோ அன்றாடக் கூலியாக வேலை பார்க்கிறோம். ரஜினி எங்களின் தெய்வம். அவருக்காக வேலை செய்ய தைரியம் இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் பணம் எங்களிடம் இல்லை" என்று கைவிரிக்க... இதை எதிர்பார்த்தது போலவே, "ஓ.கே. பரவாயில்லை. ஒரு 'சி' க்கு மேல் செலவு செய்யக்கூடிய நபர் யாராவது நம் மன்றத்தில் இருக்கிறார்களா? நீங்களே அவர்களது பெயர்களை சிபாரிசு செய்யுங்கள். நாங்கள் அவர்களை நியமிக்கிறோம். உங்களுக்கும் மாவட்ட அளவில் கட்சியில் கௌரவப்பொறுப்புகள் தருகிறோம்" என்று கண்டிஷன் போடுகிறார்களாம் ரஜினியின் ஆலோசகர்கள்.
இந்த வகையில், வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பொறுப்புகளுக்கு மட்டும் பதவி நியமனம் நடந்திருக்கின்றன. தூத்துக்குடி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஒன்றிய - நகர அளவிலான பதவிகளுக்கு நியமனம் நடைபெற்றுள்ளன. இந்த வாரம், காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ராகவேந்திரா மண்டபத்தில் இன்டர்வியு நடைபெறவிருக்கிறது. நிர்வாகிகள் நியமனத்தை அடுத்து வரும் நாள்களில் தொடர்ச்சியாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த நியமனங்கள் முடிந்ததும், ரஜினியின் சுற்றுப்பயணம் தொடங்கும். இதுதான் ரஜினியின் அரசியல் திட்டம்!
தேனி மாவட்ட நிர்வாகிகள் தேர்வின்போது... பதவி கேட்டு சிலர் குரல் கொடுத்தனர். அதைக்கேட்ட, சீனியர் தலைவர் ஒருவர் ஆவேசமாக எழுந்து, ''ஏம்பா...இப்படி பதவிக்காக சண்டை போடுகிறீர்கள்? நாம்தான் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அழைத்தோம். அவரும் வந்தார். அடுத்து, அவரை முதல்வராக உட்கார வைக்கவேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த நேரத்தில், நமக்குள் எதற்கு சண்டை?" என்று குரல் கொடுக்க... அங்கிருந்தவர்கள் அமைதியானார்களாம். போட்டியே இல்லாமல் நியமனம் நடந்ததாம். வந்திருந்த தேனிக்காரர் ஒருவர், தனது சட்டையை விலக்கி, ''1996 ம் வருடம் ரஜினி மன்றத்தினரை சில அரசியல் கட்சியினர் எதிர்த்தார்கள். சண்டை வந்தது. என்னைக் கத்தியால் குத்திவிட்டனர். பயங்கரக் காயம். இதோ பாருங்கள்... காயத்தை!'' என்று காட்டினாராம். ஏராளமான தையல்கள் போட்டிருந்த வடுவைப் பார்த்து மேடையில் இருந்தவர்கள் அதிர்ந்தார்களாம். இத்தனை வருடங்களாக இவரைப் பற்றி ரஜினிக்குத் தெரியாதாம். முதல்முறையாக, தகவல் சொன்னார்களாம். நெகிழ்ந்துபோனாராம் ரஜினி!
இங்கும் பிரச்னை. பாண்டிச்சேரி மாநிலத்துக்கு நிர்வாகிகள் நியமன நேரம் வந்தது. மாநில துணைச் செயலாளர் பதவி கேட்டு ஒருவர் அடம்பிடிக்க... அவருக்குக் கொடுக்கக் கூடாது என்று மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினியின் ஆலோசகர்கள் குழம்பிப்போய் நிற்க... ரஜினியிடமிருந்து போன் வந்ததாம். 'திருமண மண்டபம் அருகே டீக்கடையில் பாண்டி சங்கர் என்பவர் கடந்த நாலரை மணி நேரமாக நிற்கிறார். அவரை அழைத்துப் பேசுங்கள்' என்றாராம். ஆரம்ப காலத்தில் ரஜினியின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகத் திகழ்ந்தவர் இவர். கடந்த சில வருடங்களாக ஏதோ சில காரணங்களைச் சொல்லி, இவரை மன்றத்தை விட்டு விலக்கிவிட்டனர். இருந்தாலும், ரஜினி மீது இருந்த விசுவாசத்தால் புதுவை நிர்வாகிகள் நியமன நாளன்று சங்கர் நேராக சென்னைக்கு வந்துவிட்டார். அவருக்கு அழைப்பிதழ் இல்லாததால், உள்ளே விடவில்லை. மண்டபத்தின் உள்ளே ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ள டீக்கடையில் காத்திருந்தார். அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். சங்கர் வருகை பற்றியத் தகவல் ரஜினியை எப்படியோ எட்டியிருக்கிறது. இதையடுத்து, மாநிலப் பொறுப்பாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டார் சங்கர். மாநிலச் செயலாளராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. சுமுகமாக முடிந்தது.
பணத்தை இன்வெஸ்ட் செய்கிறார்களா?
ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் பதவிக்கு கோடீஸ்வரர்கள்தான் வரமுடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. இதைச் சுட்டிக்காட்டிய பழைய நிர்வாகிகள், "மன்றத்தைப் பற்றி ஏதும் தெரியாத அவர்கள் வந்து என்ன செய்வார்கள்? போட்ட பணத்தை அறுவடை செய்யத்தானே பார்ப்பார்கள்? அப்பேர்பட்ட பச்சோந்திகளுக்குப் பதவியா... அடியாட்கள் பலம் இருந்தால் போதுமா?" என்று கேட்க... "அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரஜினியை முதல்வராக அமர வைப்பதுதான் முதல் அஜென்டா. அவரை உட்கார வைத்தபிறகு, அடுத்து என்ன... எப்படி செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று பதில் வந்ததாம். இதை நம்புவதா? வேண்டாமா? என்கிற குழப்பத்துடன் மன்ற முக்கியஸ்தர்கள் கிளம்பிப்போனார்களாம்.
மன்றத்தினரிடம் நாசூக்காகப் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துவருகிறார்கள் ரஜினியின் ஆலோசகர்கள். 'இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாமலா நடக்கும்?' என்று கேட்கிறார்கள் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள்!
கம்பி எண்ண வைத்த காதல் ரோஜா; வசமாகச் சிக்கிய ஆசிரியர்
February 20, 2018விழுப்புரத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு ரோசாப்பூ கொடுத்து காதலைத் தெரிவித்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றோர் ஆசிரியர...
விழுப்புரத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு ரோசாப்பூ கொடுத்து காதலைத் தெரிவித்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றோர் ஆசிரியரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அடுத்திருக்கும் மேல்நாரியப்பனூர் என்ற ஊரில் கிறிஸ்துவ தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 14-ம் தேதி அதே பள்ளியில் 8-ம் வகுப்புப் படிக்கும் 13 வயது மாணவிஆசிரியர் ரம்யாவுக்கு (பெயர் மாற்றம்) அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் நிர்மல் என்பவர், “ஐ லவ் யூ, நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்” என்று சொல்லி ரோஜாப்பூ, மல்லிகைப்பூ, சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார். அதிர்ந்துபோன அந்த மாணவி என்ன செய்வதென்றே தெரியாமல் அழுதுகொண்டே தன் வகுப்பறைக்குச் சென்றிருக்கிறார். உடனே உஷாரான ஆசிரியர் நிர்மல், தன்னுடன் பணி புரியும் சக ஆசிரியரான லாரன்சிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார்.
உடனே மாணவி ரம்யாவை அழைத்த அந்த இரு ஆசிரியர்களும், “ஏன் நிர்மல்குமார் சாரிடம் பேசாமல் வந்துவிட்டாய் என்று கேட்ட அவர்கள் “அந்த சார் ஐ லவ் யூ சொன்ன விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் அதற்குப் பிறகு, இந்த ஸ்கூலில் நீ படிக்க முடியாது” என்று மிரட்டியிருக்கிறார்களாம். அதனால் பயந்துபோன மாணவி ரம்யா, யாரிடமும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்திருக்கிறார். வீட்டிலும் அழுதுகொண்டே இருந்ததால் அவளின் பெற்றோர்கள் விசாரித்திருக்கின்றனர். அப்போது நடந்தவை அனைத்தையும் அழுது கொண்டே அவர்களிடம் தெரிவித்திருக்கிறாள் ரம்யா. அதிர்ந்துபோன பெற்றோர் உடனே சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட பொதுமக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தியதோடு ஆசிரியர்கள் நிர்மல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த லாரன்ஸ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அதையடுத்து அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி இன்று உத்தரவுப் பிறப்பித்திருக்கிறார்.
சீமானை கேட்ட கேள்விக்கு குறுக்கிட்ட கமல், அதிமுக-விற்கு பதிலடி
February 20, 2018கமல்ஹாசன் நாளை மதுரையில் பிரமாண்டமாக தன் அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தவுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ம...
கமல்ஹாசன் நாளை மதுரையில் பிரமாண்டமாக தன் அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தவுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மதுரை வரவுள்ளனர்.மேலும், இன்று கமலை வாழ்த்துவதற்காக சீமான் அவர் இல்லத்திற்கு வந்தார், அப்போது பத்திரிகையாளர்கள் ‘கமல் அரசியலை ஏற்பீர்களா?’ என்று கேட்டனர்.
அதற்கு கமல் குறுக்கிட்டு ‘சீமானுக்கு என் படங்கள் தெரியும், கொள்கை தெரியாது, அது தெரியாமல் எப்படி ஏற்க முடியும்?’ என பதில் அளித்தார்.
இதை தொடர்ந்து அதிமுக-வில் யாரையும் சந்திப்பதாக இல்லை என கமல் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
BiggBoss பிறகு நான் அந்த விஷயத்தை செய்யவில்லை- ஓவியா அதிரடி
February 20, 2018தலைவி ஓவியா BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப...
இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும், களவாணி 2 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் நிறைய செய்திகள் வந்தன.
ஆனால் இந்த இரண்டு தகவல்களை மறுத்துள்ளார் ஓவியா. தான் இதுவரை சம்பளம் எதுவும் உயர்த்தவில்லை என்றும் களவாணி 2 படத்தில் நடிகையாக தான் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.