ஏன் கௌதமி அதை சொல்லவில்லையா? கமல் அதிரடி
June 20, 2018கமல்ஹாசனும், கௌதமியும் ஒரு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதை தொடர...
அதை தொடர்ந்து கௌதமி கமல் எனக்கு சம்பளமே தரவில்லை என்று புகார் அளிக்க, பிரச்சனை பெரிதாகியது.
கமல் அரசியலுக்கு வரும் நேரத்தில் கௌதமி வேண்டுமென்றே இப்படி செய்கின்றார் என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்நிலையில் கௌதமிக்கு சம்பளம் கொடுக்காதது குறித்து கமலிடம் இன்று கேட்கையில் ‘கௌதமிக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது.
சம்பளம் கொடுக்கவில்லை என்று சொன்னவர், பிறகு நான் சம்பளம் கொடுத்ததை ஏன் வெளியே சொல்லவில்லை’ என்று அதிரடியாக பதில் அளித்தார்.
சி.டி.இ.டி தேர்வில் தமிழ் மறுப்பா..? -என்ன சொல்கிறார் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
June 18, 2018மத்திய ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. `இந்தத் தகவல் உண்மையில்லை' என்று மறுத்துள்ளார் மத்திய அ...
மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகள் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சிபெற வேண்டும். இதைத் தவிர, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் சைனிக் உள்ளிட்ட பள்ளிகளும் ஆசிரியராகப் பணியாற்ற இந்தத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இத்தேர்வினை, மத்திய இடைநிலை கல்விவாரியம் சி.பி.எஸ்.இ எடுத்து நடத்தி வருகிறது. தாள் 1, தாள் 2 என இரண்டு தாள்களை கொண்ட சி.டி.இ.டி தேர்வில் மொழித் தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு வரை தமிழ் மொழி உட்பட 20 மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் தேர்வு எழுத முடியும் என்று செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, இந்த ஆண்டு தேர்வு எழுதவிருந்த தேர்வர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இத்தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு இந்தமுறை அமலுக்கு வந்தால் மிகவும் பின்னடைவாக இருக்கும் எனக் கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், சி.டி.இ.டி தேர்வு குறித்து வெளியான செய்திக்கு விளக்கமளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `இந்தி சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் தேர்வு எழுத முடியும் என்று வெளியான தகவல் உண்மையில்லை. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்பட 20 மொழிகளில், தேர்வர்கள் தேர்வு எழுதலாம். 20 மொழிகளில் தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ-க்கு உத்தரவிட்டுள்ளேன்' என தெரிவித்தார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா? போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை
June 18, 2018தமிழ் ஒளிபரப்பான முதல் பிக்பாஸ் சீசனில் ரசிகர்களின் பேவோரைட் நடிகை ஓவியா தான். அவர் போட்டியில் இருந்து பாதியில் விலகியது அவரது ரசிகர்கள் பல...
இந்நிலையில் தற்போது அவர் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக நுழைந்துள்ளார். அவரை கமல்ஹாசன் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைத்தார்.
இந்நிலையில் அவர் விருந்தினராக மட்டுமே வீட்டுக்குள் சென்றுள்ளாரா என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது. இன்று ஒளிபரப்பப்பட்ட டீசரில் ஓவியா கதவின் அருகே நின்றுகொண்டு வெளியேறுவதற்கு ரெடியாக உள்ளது போல தெரிகிறது. மற்றவர்கள் துரத்தில் நின்று வழியனுப்புவது கண்ணாடியில் தெரிகிறது. போகும் முன் அவர் மற்றவர்களை பார்த்து "உங்களை பார்த்தால் பாவமாக உள்ளது" என அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் 2 - உறுதியான 2 புதிய போட்டியாளர்கள்
June 15, 2018நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மக்களிடம் அமோக வரவேற்பு கிட...
இந்நிலையில் இந்த 2வது சீசனின் போட்டியாளர்கள் யார் யார் என பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. நடிகர் பவர் ஸ்டார், மும்தாஜ், தாடி பாலாஜி மற்றும் அவர் மனைவி, எங்க வீடு மாப்பிள்ளை அபர்ணதி, இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை யாஷிகா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தற்போது புதிய இரண்டு பெயர்கள் பற்றிய உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. பிரபல நடிகை ஜனனி ஐயர் மற்றும் வாணி ராணி சீரியலில் நடிக்கும் மமதி சாரி அகியோர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் நுழைவார்கள் என்று தகவல் வந்துள்ளது.
ஷங்கருக்கு இப்படி ஒரு நிலைமையா! சோகத்தில் கோலிவுட்
June 15, 2018ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் படம் எப்போது வரும் என அனைவரும் காத்திருப்பார்கள். இவர் இயக்கத்தில் ஆசிய கண்டத்திலேயே அதிக ...
இவர் இயக்கத்தில் ஆசிய கண்டத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 2.0 படம் எப்போது வரும் என்று படக்குழுவிற்கே தெரியாது.
ஆம், படத்தை பல இடங்களில் கிராபிக்ஸ் அமைக்கும் பணிக்கு கொடுத்துள்ளனர், இதில் ஒரு இடத்தில் கம்பெனிக்கு சீல் வைத்து பூட்டியேவிட்டார்களாம்.
இதனால், ஒரு சில காட்சிகள் அந்த இடத்திலேயே மாட்டிக்கொண்டதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஷங்கர் மிகவும் வருத்தத்தில் இருக்க, இனி இது வேலைக்கு ஆகாது என இந்தியன்-2விற்கு அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
எனக்காக மட்டும் தான் பிக்பாஸ்-2 வீட்டில் அது உள்ளது, பவர்ஸ்டார் வெளியிட்ட தகவல்
June 15, 2018பிக்பாஸ் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது. பலரும் இந்த வீட்டிற்குள் யார் வரப்போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அ...
அந்த வகையில் தற்போதைக்கு பவர்ஸ்டார் கண்டிப்பாக இந்த வீட்டிற்குள் வருவதை அவரே ஒரு பேட்டியில் உறுதியளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் ஜெயில் போல் ஒரு செட் உள்ளதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.
இதுக்குறித்து பவர்ஸ்டாரிடம் கேட்கையில் ‘நம்ம பார்க்காத ஜெயிலா, அந்த வீட்டில் எனக்காக மட்டும் தான் அதை வைத்துள்ளார்கள் போல’ என்று கூறியுள்ளார்.