திரி -திரைவிமர்சனம்-இன்னும் அழுத்தமாக பற்ற வைத்து இருக்கலாம்.

மங்காத்தா, வேதாளம், ஜீரோ என பல படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகர் அஸ்வின். அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில் இவர் நடித்த திரி படம...

மங்காத்தா, வேதாளம், ஜீரோ என பல படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகர் அஸ்வின். அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில் இவர் நடித்த திரி படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. திரி ரசிகர்கள் மனதில் பற்றியதா? பார்ப்போம்.

கதைக்களம்

ஜெய பிரகாஷ் மிகவும் கண்டிப்பான தந்தை, எப்பவும் Discipline-ஆக இருக்க வேண்டும் என்பதில் தன் மகன் அஷ்வினிடம் கண்டிப்பாக இருப்பார். தன் மகனை ஒரு கல்லூரியின் ஆசிரியராக ஆக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்.

கல்லூரிக்கு ஒரு நாள் மார்க் ஷீட் வாங்க செல்லும் அஷ்வின் ஒரு யதார்த்தமான மோதலில் கல்லூரி ஓனரின் மகனை அடிக்கின்றார். இதனால், அவர் எங்குமே படிக்க முடியாத படி அவர் செய்கின்றார்.

படிக்காத அவர்களுக்கே இத்தனை ரோஷம் இருக்கும் போது படித்த நமக்கு இருக்கக்கூடாதா? என அஷ்வின் தன் நண்பர்களுடன் இணைந்து சமுதாயத்தில் மிகப்பெரும் சக்தியாக இருப்பவர்களை எப்படி வெல்கின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அஷ்வினுக்கு தனக்கு என்ன வரும் என்பது தெளிவாக தெரிகின்றது. சரியாக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். திரியில் கொஞ்சம் ஆக்‌ஷனிலும் இறங்கியுள்ளார். ஆனால், இவருக்கு ஏதோ ஆக்‌ஷன் செட் ஆகவில்லையோ என்று தோன்றுகின்றதோ, சாக்லேட் பாய் இமேஜ்ஜை தாண்டி அடிதடி சண்டையில் பார்க்க நேரம் இருக்கின்றது.

படத்தின் மிகப்பெரும் பலம் ஜெயபிரகாஷ், அவர் வாத்தியாராகவே ஆகிவிடலாம் போல, தன் மகனிடம் கண்டிப்பாக இருக்கும் இடத்திலும் சரி, தன் மகன் அடி வாங்கி வந்த போது ஊக்கம் கொடுக்கும் இடத்திலும் சரி யதார்த்தமான தந்தையாக கண்முன் வந்து செல்கின்றார். குறிப்பாக சண்டை என்றால் ஒதுங்கி போ, ஒதுங்கி போ என்று சொல்லும் இடங்களில் டிப்பிக்கள் மிடில் கிளாஸ் அப்பா.

ஜெயபிரகாஷ் எப்படி வாத்தியாரோ, அழகப்பனை அரசியவாதியாகவே எழுதி கொடுத்துவிடலாம். அப்படி ஒரு யதார்த்தம், தன் மகனை அஷ்வின் அடித்துவிட்டார் என தெரிந்து அவரை அலையவிடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

கருணாகரன், டேனியல் என காமெடிக்கு ஆள் இருந்தும் பெரிதும் காமெடி ஒர்க்-அவுட் ஆகவில்லை. படம் தில், தூள் மாதிரியான கதைக்களம் தான், அதற்கு அஷ்வின் இத்தனை சீக்கிரம் இந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

அஜீஷின் இசையில் பாடல்கள் பெரிதும் கவரவில்லை, இரண்டாம் பாதியில் ஏன் அந்த இரண்டு பாடல்கள் என்று கேட்க வைக்கின்றது. ஒரு பக்கா கமர்ஷியல் கதையில் நல்ல கருத்தையும் கூறியதற்கு அஷோக் அமிர்தராஜை பாராட்டலாம். ஆனால், இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம், குறிப்பாக முதல் பாதி.

க்ளாப்ஸ்

ஜெயபிரகாஷ்-அஷ்வின் அப்பா, மகன் உறவு, அவரின் குடும்பம் என அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கின்றது.

பல்ப்ஸ்

படம் நீண்ட நாட்களாக எடுத்தார்களா என்று தெரியவில்லை, முதல் பாதியில் காட்சிகள் கோர்வையாகவே இல்லை.

சமூகத்தில் அத்தனை பெரிய சக்தியாக இருக்கும் அழகப்பனை அஷ்வின் கொஞ்சம் எளிதில் வீழ்த்தியது போன்ற உணர்வு.

மொத்தத்தில் திரி சமுதாயத்திற்கு தேவையான கதை என்றாலும் இன்னும் அழுத்தமாக பற்ற வைத்து இருக்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About