சினிமா
திரைவிமர்சனம்
ரூபாய் - திரைவிமர்சனம்-பணம் நினைத்தால் நம்மை எப்படி ஓட வைக்கும்...தெரியுமா?
July 14, 2017
கயல் வெற்றி ஜோடி சந்திரன், ஆனந்தி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் தான் ரூபாய். சாட்டை என்ற சமூக அக்கறை கொண்ட படத்தை கொடுத்த அன்பழகன் இயக்கத்தில் பிரபு சாலமன் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் தான் ரூபாய்.
கதைக்களம்
சந்திரன் மற்றும் அவருடைய நண்பர் தேனியில் லோட் வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அப்படியிருக்க சென்னைக்கு ஒரு வேலையாக வர அவர்களுக்கு கடனில் இருக்கும் தங்கள் வண்டியை மீட்க கொஞ்சம் பணம் தேவைப்படுகின்றது.
அந்த பணத்திற்காக சின்னி ஜெயந்த் மற்றும் அவரின் மகள் ஆனந்தியும் புது வீட்டிற்கு செல்ல அவர்கள் பொருட்களை வண்டியில் ஏற்றி, இறக்க ஒரு அமோண்ட் பேசி பணத்தை பெற நினைக்கின்றனர்.
இதே நேரத்தில் ஹரிஸ் உத்தமன் ஒரு பினான்ஸ் கம்பெனியில் 2 கோடிகளுக்கு மேல் பணத்தை கொள்ளையடித்து தப்பிக்கின்றார். செக் போஸ்ட் ஒன்றில் அந்த பணத்தை போலிஸிடம் இருந்து தப்பிக்க சந்திரன் வண்டியில் வைக்கின்றார்.
பிறகு அந்த வண்டியில் இருக்கும் பணம் சந்திரன் மற்றும் அவருடைய நண்பர், ஆனந்தி, சின்னி ஜெயந்திற்கு தெரியவர, அதன்பின் அந்த பணம் என்ன ஆனது. ஹரிஸ் உத்தமன் இவர்களை பிடித்தாரா? போலிஸ் ஹரிஸ் உத்தமனை பிடித்ததா? என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கின்றனர்.
படத்தை பற்றிய அலசல்
பிரபு சாலமனின் உதவி இயக்குனர் தான் அன்பழகன். அதனால் என்னவோ சாட்டை முதல் படம் கொஞ்சம் வித்தியாசமாக செய்தார். ஆனால், ரூபாய் அப்படியே பிரபு சாலமன் டைப் மூவி தான், ஹீரோ, அவருக்கு ஒரு நண்பர், ட்ராவல் சம்மந்தப்பட்ட வேலைகளில் உள்ளனர். ஹீரோயினை பார்த்ததும் காதல், அவருக்காக துணிந்து எடுக்கும் முடிவு, மலைப்பிரதேசத்தில் ஒரு சில காட்சிகள், அதிர்ச்சியான கிளைமேக்ஸ் அதே பார்முலா.
சந்திரன், ஆனந்தி இருவருமே கயலில் வாழ்ந்து இருப்பார்கள் கதாபாத்திரங்களாகவே, ஏற்கனவே பார்த்த ஜோடி என்பதால் இந்த படத்திலும் இயல்பாக மனதில் இடம்பிடிக்கின்றனர். சின்னி ஜெயந்த் இப்படி ஒரு நடிகனை ஏன் தமிழ்சினிமா தவறவிட்டது என்று தெரியவில்லை.
காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்கின்றார். ஹரிஸ் உத்தமனிற்கு இதேபோல் தான் தொடர்ந்து பல படங்களில் கதாபாத்திரம் அமைகின்றது. ஆனால், அவரும் அதை தொடர்ந்து சிறப்பாகவே செய்து வருகின்றார்.
படம் என்ன தான் சுவாரசியமான கதை என்றாலும், அதை சரியான இடத்தில் முடித்தால் தான் நிறைவு பெறும், அப்படி சரியான பயணத்தில் நகரும் கதை கிளைமேக்ஸ் மட்டும் கொஞ்சம் தடுமாறுகின்றது, சோகத்தை திணித்தது போன்ற உணர்வு.
பணத்தின் மீது ஆசைக்கொள்பவன் என்ன ஆவான் என்பதற்கு சரியான முடிவு தான் என்றாலும், ஏதோ ஒரு அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், ஹரிஸ் உத்தமன் ஏதோ சர்வருக்கு டிப்ஸ் கொடுப்பது போல் அனைவரையுமே கொலை செய்துக்கொண்டே செல்கின்றார். வழக்கம் போல் போலீஸ் கிளைமேக்ஸில் தான் அவர்களை நெருங்குகிறது.
டி.இமானின் இசையில் வழக்கம் போல் தன்னிடம் எப்போது இருக்கும் ஹிட் டியூன்களை தட்டிவிட்டுள்ளார். இளையராஜாவின் ஒளிப்பதிவு மூனார், தேனி கிளைமேட்டை நம்மை உணர வைக்கின்றது.
க்ளாப்ஸ்
நடிகர், நடிகைகள் பங்களிப்பு, குறிப்பாக சின்னி ஜெயந்தின் நடிப்பு.
டி.இமானின் பின்னணி இசை.
ஹரிஸ் உத்தமன் ஒருபுறம் சீரியஸாக இருக்க, அவருடன் பயணிக்கும் நபர் ஒருவர் செய்யும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.
பல்ப்ஸ்
படம் ஆரம்பித்த ஒரு சில நிமிடம் கதைக்குள் போகாமல் செல்லும் காட்சிகள்.
கிளைமேக்ஸில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகள் இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் உலகமே பணத்தை தேடி ஓட, பணம் நினைத்தால் நம்மை எப்படி ஓட வைக்கும் என்பதை காட்டியதற்காகவே கண்டிப்பாக நம்ம ரூபாயை இந்த ரூபாய் பார்க்க ஒரு முறை செலவழிக்கலாம்.

0 comments