'எந்த அடிப்படையில் பிரகாஷ்ராஜ்க்கு 'வில்லன்' விருது கொடுத்தார்கள்?''- சீறும் இயக்குநர் வெங்கடேஷ்

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் லிஸ்ட் நேற்று வெளியானது. 2009-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுகள் வரை சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை...

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் லிஸ்ட் நேற்று வெளியானது. 2009-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுகள் வரை சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல பிரிவு வாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அளிக்கப்பட்டுள்ளதால், திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இந்த விருது அறிவிப்பு திரைத்துறையில் இருக்கும் சிலரது மத்தியில் ஆச்சர்யத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதுகள் ஒருதலைப் பட்சமாகத் தரப்பட்டுள்ளது என சிலர் கூறிவருகின்றனர். இதற்கிடையே இயக்குநர் சுசீந்திரன், தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் உள்ளது என்று கூறி, கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் 'அங்காடித் தெரு' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் இயக்குநருமான வெங்கடேஷ் தனது ஃபேஸ்புக் பதிவில் அங்காடித் தெருவில் நான் நடித்ததுக்கு இன்று வரை மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், 2009-ல் சிறந்த வில்லன், 'வில்லு' படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ்க்குதான்... அப்போ, அங்காடித் தெருவில் நான் ஏற்ற கதாபாத்திரம் வில்லன் இல்லை குணச்சித்திரம் என்பது தெளிவாகியது எனக்கு..! உங்களுக்கு நண்பர்களே...? என்று பதிவிட்டிருந்தார். இதுபற்றி வெங்கடேஷிடம் பேசினோம்.

''இந்த விருது அறிவிப்பு எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. 'அங்காடித் தெரு' படத்தில் நடித்ததுக்காக இன்று வரை மக்கள் என்னை பாராட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதைப் பதிவு செய்வதற்கு முன்பு நான் திரைத்துறையில் இருக்கும் எனது நண்பர்களிடம்கூட கேட்டேன். இப்படி ஒரு பதிவு போடப்போகிறேன். எனக்கு மன வருத்தமாக உள்ளது என்று. அது உங்கள் பதிவு நீங்கள் தாராளமாகப் போடுங்கள் என்றார்கள். எந்த அடிப்படையில் இந்த விருதைக் கொடுத்தார்கள் என்று நானும் ஒரு நாள் முழுக்க யோசித்தேன். ஆனா, பதில் கிடைக்கவில்லை. விருதை தேர்வு செய்த ஜூரி யார் என்பது நமக்குத் தெரியாது. அதை அவர்களும் சொல்லவில்லை.

'மைனா' படத்தில் நடித்ததுக்காக தம்பி ராமையாவுக்கு விருது கொடுத்து இருக்கிறார்கள். அவருக்குக் கண்டிப்பாகக் கொடுக்கப்பட வேண்டிய விருது. ஆனால், 'வில்லு' படத்தில் எந்த அடிப்படையில் பிரகாஷ்ராஜ்க்கு 'வில்லன்' விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்போது 'அங்காடித் தெரு' படத்தில் நடித்த எனக்கு சிறந்த குணசித்திர விருதாவது கொடுத்திருக்க வேண்டும் இல்லையா? 'அங்காடித் தெரு' படத்தில் நடிகர் மகேஷுக்கு சிறந்த அறிமுக நடிகர் விருதாவது கிடைத்திருக்க வேண்டும். அதுவும் கிடைக்கவில்லை. ஆனால்,  ரசிகர்கள் பலர்  'அங்காடித் தெரு' படம் பெயர் கேட்டாலே  நீங்கள்தான் கண்முன்னே வருவீர்கள். எங்களுடைய விருது உங்களுக்குத்தான் என்று என் பதிவுக்குக் கமென்ட் செய்துள்ளனர். இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது'' எனக் கூறினார் வெங்கடேஷ்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About