சூரிய நமஸ்காரம் நன்மைகளுக்கான வாசல்!

உடலுக்கோ மனத்துக்கோ பயன் தராத எந்தக் காரியத்தையும் செய்யச் சொன்னதில்லை நம் முன்னோர்கள். பெரியவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு நன்ம...

உடலுக்கோ மனத்துக்கோ பயன் தராத எந்தக் காரியத்தையும் செய்யச் சொன்னதில்லை நம் முன்னோர்கள். பெரியவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு நன்மை இருந்தே தீரும். அப்படி ஒரு அற்புதமான காரியம்தான் அதிகாலை சூரிய நமஸ்காரம். சூரியனை கும்பிடுவது அத்தனை முக்கியமா? சூரியனை கும்பிடச் சொல்லி சூரியன் கேட்டுச்சான்னு எல்லாம் நீங்கள் கேட்கலாம். பதில் சொல்றோம் இருங்கள்.

விடியல்காலையில் அதாவது, சூரியன் உதித்துக்கொண்டு இருக்கும் நேரத்துக்குள் எழுந்து காலைக்கடன்களை முடித்த பிறகு, குளித்து சுத்தமான ஆடை அணிந்துகொள்ளவும். விபூதி, குங்குமம், திருமண் இதில் எதையாவது நெற்றியில் இட்டுக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை வணங்குவதே சூரிய நமஸ்காரம். மூச்சை உள்ளிழுத்து கைகளை மார்பை ஒட்டினாற்போல் வைத்து கூப்பிக்கொண்டு செய்யலாம். மேலும், சில யோகப்பயிற்சிகளை செய்தவாரும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். இதை ஏன் செய்யணும் தெரியுமா?

இரவெல்லாம் உள்ளுறுப்புகள் வேகமாக வேலை செய்யும். இதனால் காலையில் விழிக்கும்போது, நம் உடலும் உள்ளுறுப்புகளும் சோர்வாக இருக்கும். ரத்த ஓட்டமும், இதய துடிப்பும் கூட குறைவாக இருக்கும். எனவே, அதிகாலை எழுந்து வெளியே வந்து சுவாசிப்பது நல்லது. இதனால் உடல் உற்சாகம் கொள்கிறது. மேலும், எழும் ஞாயிற்றின் வெளிச்சம் படுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மையானது.

மேலும், சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் புத்துணர்வு பெற்று ரத்த ஓட்டம் அதிகமாகி  உடலும் உள்ளமும் சுறுசுறுப்படைகிறது. மலச்சிக்கல், பசியின்மை உள்ளிட்ட பல நோய்களுக்கு தீர்வாக இந்த சூரிய நமஸ்காரம் இருக்கிறதாம். எனவே, இதை ஆன்மிக விஷயமாக மட்டுமன்றி ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சியாகவும் மேற்கொள்ளுங்கள். இளமை, அழகு, ஆரோக்கியம் அளிக்கும் சூரிய நமஸ்காரத்தை செய்யும்போது கீழ்கண்ட சூரிய காயத்ரி மந்திரத்தை சொல்லியவாறே செய்யலாம். இன்றைய காலைப் பொழுது இனிமையாக அமைய வாழ்த்துகள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About