ஏடிஎம் மெஷின்களில் ரசீதுகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மையால் ஆண்மைக்கு ஆபத்து?

நாடெங்கும் நிலவும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆ...

நாடெங்கும் நிலவும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, முன்னரே நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்திருந்தது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, புற்றுநோய் உட்பட, பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டிருப்பது போல், ஆண்மைக் குறைவு, மலட்டு தன்மைக்கும், இது முக்கிய காரணமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டு இருந்தது.

அத்துடன் அண்மைக் காலமாக நகர்ப்புறங்களில், இளம் வயதிலேயே ஆண்மை குறைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது என்றும் வாகனங்கள் பெருகி வருவதால், அவற்றிலிருந்து வெளியேறும், பெட்ரோலிய பொருட்களின் கழிவு, காற்றில் கலந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. இதனால், ஆண் ஹார்மோனான “டெஸ்டோஸ்டிரான்’ குறைந்து, பெண் ஹார்மோன் “ஈஸ்ட்ரோஜன்’ அதிகரிப்பது கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் வெளியான விஷயமே முழுமையாக ஜனங்களுக்கு போய் சேராத நிலையில் ஏடிஎம்., ரசீது காகிதம் , அதில் பயன்படுத்தப்படும் மை ஆண்களின் விறைப்பு தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

முன்னரே குறிப்பிட்டது போல் இன்றைய மெஷின் போன்ற வாழ்க்கை சூழ்நிலையில், மனிதனுக்கு மனநிம்மதி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், செக்ஸ் விஷயத்தில் ஆண்கள், பெண்கள் என பல்வேறு புதுபுதுப்பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.அதில் குறிப்பாக ஆண்கள், 40 வயதுக்கு மேல், செக்ஸில் ஈடுபடும் போது, விறைப்பு தன்மை பிரச்சனையை அதிகளவில் சந்தித்து வருகின்றனர். இதற்கு வயது முதிர்வு, இதயக் கோளாறு, மன அழுத்தம், ஆபாச படங்களுக்கு அடிமையாவது என பல காரணங்கள் கூறப்பட்டாலும், தற்போது வெளியாகியுள்ள காரணம் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது.

அதாவது செக்ஸ் விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத், ஏடிஎம் மெஷின்களில் ரசீதுகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை ஆகிய இரண்டுமே இந்த பிரச்சனையை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே போல, லாட்டரி டிக்கெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் வழங்கப்படும் ரசீதுகளும் இந்த பிரச்சனை ஏற்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அதில் பிஸ்பினால்-ஏ என்ற ரசாயனம் அதிகளவில் காணப்படுவதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களின் உடலில் ஆஸ்டிரோஜென் எனும் ஹார்மோனை, அதிகளவில் சுரக்கவைப்பதால், இந்த விறைப்பு பிரச்சனை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏடிஎம்.,களில் ரசீதை எடுத்த பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கையை சுத்தமாக கழுவுவதும், சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுகளுக்கு பதிலால பர்ஸில், அந்த ரசீதுகளை வைப்பது நல்ல தீர்வாக அமையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல...

1 comments

  1. boss ithellam duuppu... Gents easily find all the mistakes... so... someone has created this hype.... This is not true at all...

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About