“சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல்லாம் பாத்திருக்கேன். ஜூலி மாதிரி நடிகையைப் பார்த்ததே இல்லை!” - கஞ்சா கருப்பு கலகல!

`பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் வெளியேற்றப்பட்டவர் கஞ்சா கருப்பு. சொந்த ஊரில் இருக்கும் இவர், இப்போது என்ன செய்துக...

`பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் வெளியேற்றப்பட்டவர் கஞ்சா கருப்பு. சொந்த ஊரில் இருக்கும் இவர், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என விசாரித்தேன். செல்லப்பிராணிகளுடன் விளையாட்டு, குடும்பத்தோடு குஷி என செம ஜாலியாக இருக்கும் கஞ்சா கருப்புடன் குட்டி சிட் சாட்!

``எப்படி இருக்கீங்க?”

``ரொம்ப நல்லா இருக்கேன். நான் ஊர்ல இல்லாததுனால என் நாய்க்கு உடம்பு சரியில்லாமப்போயிடுச்சு. இப்போதேன் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்து உக்காந்திருக்கேன். நிலத்துல வேலை, குடும்பத்தோடு இருக்கிறதுனு நேரமும் சரியா இருக்கு.” 

`` `பிக் பாஸ்' வீட்டைவிட்டு வந்ததுனால கவலையா இருக்கா?”

``அங்கே இருக்கிறவங்களை நினைச்சாதான் ரொம்பக்  கவலையா இருக்கும். `எல்லோரையும் விட்டுட்டு வந்துட்டோமே!'னு அடிக்கடித் தோணும். ”

``சரி, யாரை ரொம்ப மிஸ்பண்றீங்க?”

``சினேகன், காயத்ரினு எல்லோரையும் மிஸ்பண்றேன். குறிப்பா, நமீதாவை ரொம்ப மிஸ்பண்றேன். ஏன்னா, அவங்க நேர்மையான பொண்ணு. எதுன்னாலும் நேரடியா சொல்வாங்க. `ரூல்னா அதுக்கேத்த மாதிரிதான் நடந்துக்கணும்'னு சொல்வாங்க.  வீட்டுல எது நல்லா இருக்கோ, இல்லையோ பாத்ரூமை ரொம்ப சுத்தமா வெச்சிருப்பாங்க.  ஒருகாலத்துல மகாத்மா காந்தியே பாத்ரூம் கழுவிட்டு இருந்திருக்கார். அவருக்கு மனநிலை சரியில்லாமப்போயிடுச்சோனு பலரும் நினைச்சிருக்காங்க. அப்போ, `கழிவறையைச் சுத்தமா வெச்சுக்கிட்டாத்தான் நமக்கு எந்த வியாதியும் வராது’னு சொல்லியிருக்கார் மகாத்மா. அதுமாதிரி நமீதாவிடம் பிடிச்சது நேர்மையும், சுத்தமும்தான். இந்த `பிக் பாஸ்' முடிஞ்சதும் காயத்ரி மாஸ்டர், சினேகன், வையாபுரி, சக்தி, ஆர்த்தி, கணேஷ், ஆரவ் எல்லோரையும் எங்க ஊருக்குக் கூட்டிட்டுப்போய் கிடா வெட்டி விருந்து குடுக்கலாம்னு இருக்கேன். ஆனா ஒரு கண்டிஷன். கிடாயை அறுத்துச் சுத்தப்படுத்திக் குடுத்துடுவோம். அவங்கதான் சமைக்கணும். `பிக் பாஸ்' டீம் சமைக்க, நமீதா சாப்பாடு பரிமாறணும். 11 கிடாயை வெட்டி, ஏழைகளுக்குச் சாப்பாடு  போடணும். அதான் என் ஆசை.  ஏன்னா, பணம் எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுனுதான் சொல்வாங்க. ஆனா, சாப்பாடு போட்டா வயிறு நிறைஞ்சு `போதும்'னுதான் சொல்வாங்க. இந்த 100 நாள் முடியட்டும், பெரிய நிகழ்ச்சியா நடத்திருவோம்.” 

`` `பிக் பாஸ்' டைட்டில் யார் ஜெயிப்பானு நினைக்கிறீங்க?”

``ஜூலிதான் ஜெயிப்பா. பெரிய  நாடகக்காரி ஜூலி. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் எல்லோரையும் பார்த்திருக்கேன். ஆனா, ஜூலி மாதிரி ஒரு நடிகையை நான் பார்த்ததே இல்லை. இருக்கிறவங்களை எல்லோரையும் முட்டாளாக்கி, வெளியே அனுப்பிட்டு, மொத்தப் பரிசையும் தட்டுறதுக்கு வந்திருக்கா ஜூலி”. 

`ஆர்த்திக்கும் ஜூலிக்கும் அடிக்கடி சண்டை வர, யார் காரணம்?”

``ஆர்த்தி எத்தனை படங்கள் நடிச்சிருக்காங்க. ரொம்ப சீனியர் நடிகையும்கூட. மனோரமா ஆச்சி, கோவை சரளா வரிசையில் ஆர்த்திதான். நடிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. அவங்களைத் தரக்குறைவா பேசினது தப்பா... தப்பில்லையா? ஆனா, இது மக்களுக்குத் தெரியுதா... தெரியலையான்னு தெரியலையே.”

``உங்களுக்கு ஓட்டு குறைவா விழக் காரணம் என்னவா இருக்கும்?”

``நான் மக்களுக்காக, மக்கள் எனக்காகனு இருந்தேன். ஆனா, வெறும் 15 ஆயிரம் ஓட்டுதானே விழுந்திருக்கு. `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வேலை பார்க்கிறவங்களே அவங்க விருப்பப்படி ஓட்டு போட்டுக்கிறாங்களோனு சந்தேகமா இருக்கு.  மறுபடியும், `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குக் கூட்டிட்டுப்போனால், நான் போடுற கண்டிஷனுக்கு பிக் பாஸ் கேட்குமா? முழுக்க முழுக்கக் கெட்டவிஷயத்தை மட்டுமே ஒளிபரப்பிட்டிருக்காங்க. நல்ல விஷயங்களையும் போடுங்கனு பிக் பாஸிடம் சொல்வேன்.” 

``அடுத்து படம் ஏதும் நடிக்கிறீங்களா? ”

`` `வெண்ணிலா கபடிக்குழு-2’, ‘சந்தனத்தேவன்’ அப்புறம் இன்னொரு படம். இன்னும் பேர் வெக்கலை. இந்த மூணு படங்களும் நடிச்சுட்டிருக்கேன். சொந்த விஷயமா ஊருக்கு வந்திருக்கேன். சீக்கிரமே சென்னைக்கு வரணும்.”

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About