பிரபல படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினியை வைத்து எந்திரன் 2.௦ படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில முக்கியமா...

இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினியை வைத்து எந்திரன் 2.௦ படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில முக்கியமான தமிழ் வெற்றிப்படங்களை எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஷங்கர் தயாரித்தார்.

இதில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த படம் வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இப்படம் இன்றுடன் வெளிவந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது என்று கடந்த 2 வருடங்களாக பேசப்பட்டு வருகிறது.

அதற்க்கான வேலைகளில் தான் இயக்குனர் சிம்பு தேவன் பிஸியாக உள்ளாராம். இந்நிலையில் ஷங்கர் இன்று ட்விட்டரில் புலிகேசி ஓவிய படத்தை போட்டு இன்றுடன் 11 வருடங்கள் கடந்து விட்டன, விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று தெரிவித்துள்ளார்.

    11th year of Pulikesi .Part 2 to start soon. pic.twitter.com/bct8Px4Mp4
    — Shankar Shanmugham (@shankarshanmugh) July 8, 2017

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About