ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?

ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் போடலாமா? என்னதான் நகரம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு நாம் வந்து விட்டாலும், சிறுவயது முதல் நாம் கடைப்பி...

ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் போடலாமா? என்னதான் நகரம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு நாம் வந்து விட்டாலும், சிறுவயது முதல் நாம் கடைப்பிடித்து வந்த  சில பழக்கவழக்கங்களை நம்மால் விட முடிவதில்லை. அவற்றுள் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் ஒன்று. 'எண்ணெய்க் குளியல்' நமக்கு தரும் சுகமே அலாதியானது. நமது உடலுக்கும் மனதுக்கும் இதமளிக்கக் கூடியது.ஆனால், எல்லோராலும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க முடிவதில்லை. ஒருசிலருக்குத்தான் அது சாத்தியப்படுகிறது. விடுமுறை நாள் என்பதால் பலர் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எண்ணெய்க் குளியல் போடுகிறார்கள். அப்படிக் குளிக்கும்போதெல்லாம் பெரியவர்கள், 'ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வமெல்லாம் போய்விடும்' என்ற திட்டுவதைப் பார்க்கலாம். 

உண்மையில் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா? கூடாதா?

காளிகாம்பாள் கோயில்  சண்முகசிவாச்சார்யாரிடம் கேட்டோம்.

" 'சனி நீராடு' என்று நம் முன்னோர்கள் சும்மாவாகிலும் சொல்லிவிட்டுப் போகவில்லை. எந்த ஒரு செயலைச் செய்வதென்றாலும், காரண காரியங்கள் இல்லாமல் செய்யச் சொல்வதில்லை. பஞ்சபூதங்கள், ஒன்பது கிரகங்கள், எட்டு திக்குகள் இவற்றை எல்லாம் வைத்து ஆய்வு செய்து எப்போது எதைச் செய்யவேண்டும் என்று அவர்கள் காரணத்தோடுதான் வரையறுத்து வைத்துள்ளார்கள்.

புதன்கிழமை அல்லது சனிக்கிழமைகளில்தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும். காஸ்மிக் பவர் எனர்ஜியை நமக்குப் பெற்றுத்தரும் செல்போன் டவர்களைப் போலத்தான் அவர்கள் கிழமைகளை குறிப்பிட்டுள்ளனர். இன்றைக்கு நாசா ஆய்வு செய்து செவ்வாய் கிரகம் சிவப்பாக இருக்கிறதென்றும், வியாழன் கிரகம் மஞ்சளாக இருக்கிறதென்றும் சொல்கிறார்கள். ஆனால், நம் முன்னோர்கள் எப்போதோ இதைச் சொல்லிவிட்டார்கள். 

சூரியன் உதயமாகி 6  நாழிகைக்கு மேல்  உள்ள நேரத்தை எண்ணெய் குளியலுக்கு உரிய நேரமாக எடுத்துக்கொள்ளலாமென நமது சாஸ்திர நூல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. காலை 6 மணி சூரிய உதயமென்றால், காலை 8.24 மணிக்கு மேல் மாலை 3.36 மணிக்கு முன்னதாக எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம்.

சண்முகசிவாச்சார்யார்வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும். இக்காலத்துக்கு குழந்தைகளுக்கும் இதை நாம் பழக்கப்படுத்தி நம் பாரதப் பண்பாட்டைக் காக்கவேண்டுமென்பது நம் அனைவரது கடமையாகும். இதேபோல் தீபாவளி அன்று சூரிய உதயத்துக்கு முன்பாக குளிக்க வேண்டும். அதற்கு 'மங்கள ஸ்நானம்' என்றே பெயர்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நமது உடல், உள்ளம் மட்டும் சுத்தமாவதில்லை.  நம் உடலை சமமான உஷ்ணநிலையில் வைக்கிறது. மனதில் உற்சாகம் பிறக்கச் செய்கிறது. இவை மட்டுமல்லாது நம்மைப் பிடித்த தோஷங்கள் விலகும் என்பதையும் நாம் உணர வேண்டும். இதனால் முகத்தில் ஒளிவீசும். கண் பார்வை தீட்சண்யம் அடையும்.

இத்தனை சிறப்புகள் இருப்பதால், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை புதன்கிழமையிலும் சனிக்கிழமையிலும் மேற்கொள்வதுதான் நல்லது. சில காரணங்களுக்காக இது சாத்தியப்படவில்லை என்றால், விதிவிலக் காக வேறு நாட்களில் குளிக்கலாம். அதற்கு சில வழிமுறைகளை நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை குளிக்க வேண்டி வந்தால், செம்பருத்தி போன்ற ஏதேனும் ஒரு மலரை உடம்பில் தேய்த்தோ அல்லது தண்ணீரில் விட்டோ குளிக்கலாம். செவ்வாய்க்கிழமை என்றால் நீரில் சிறிதளவு மணல் சேர்த்து குளிக்கலாம். வியாழக்கிழமை அறுகம்புல், வெள்ளிக்கிழமை என்றால் சிறிதளவு பசுஞ்சாணம் சேர்த்துக் குளிக்கலாம். இப்படிக் குளித்தால் எந்த தோஷமுமில்லை. ஆனால், இதையே வழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About