ஜூலி 2 - திரைவிமர்சனம்

சினிமாவில் கவர்ச்சிக்கும் இடம் கொடுக்கப்படும். இது படத்திற்கு ஒரு மசாலா போல கொடுக்கப்பட்டாலும் சில நேரங்களில் அது படத்தில் பெரிய தாக்கத்தை ...

சினிமாவில் கவர்ச்சிக்கும் இடம் கொடுக்கப்படும். இது படத்திற்கு ஒரு மசாலா போல கொடுக்கப்பட்டாலும் சில நேரங்களில் அது படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் கவர்ச்சியை கதையாக வைத்து ராய் லட்சுமி நடிப்பில் ஜூலி 2 ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பாகி வந்துள்ளது. வந்துள்ளது. சரி இந்த ஜூலி எப்படிப்பட்டவள் என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

நடிகை ராய் லட்சுமி தான் இப்படத்தின் ஹீரோவும், ஹீரோயினியும். ஒரு ஹீரோயினை மையப்படுத்திய படம் வந்துள்ளது ஜூலி 2. இவர் பிறப்பிலேயே சந்தேகம் எழுகிறது.

அம்மா இரண்டாவது திருமணம் செய்து வாழ அந்த சித்தப்பாவால் இன்னல்களுக்கு ஆளாகிறார் அவர். வீட்டை விட்டு விரட்டப்படும் நிலைக்கு தள்ளப்படும் ஜூலி ஒரு பெண்ணிடம் அடைக்கலம் புகுந்து விடுகிறார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என ஏகப்பட்ட கனவு. ஆசை அதற்கான பல முயற்சிகளை எடுக்க வைத்துள்ளது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் வேளையில் சினிமாவில் இருக்கும் சில காமுகர்களிடம் சிக்குகிறார்.

தன்னை தர மறுக்கும் ஜூலி ஒதுக்கப்படுவது, படுக்கையை பகிர்ந்து கொண்டால் பிரபலமாகலாம் என்பதை கட்டத்திற்குள் அடைத்துவைக்கபடுவதுமாக கதை நகர்கிறது.

ஒரு நேரத்தில் சுமித்திரா தேவி என்பவரின் பயோகிராஃபியில் நடிக்க போகிறார். அத்தோடு இவருக்கு எதிராபாராத திருப்பங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஆபத்தை நெருங்குகிறார்.

ஜூலி அதிலிருந்து தப்பித்தாரா, படுக்கையை பகிர்ந்துகொண்டாரா, அவரின் கனவு பலித்ததா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ராய் லட்சுமி ஒரு அனுபவமான நடிகை தான். கிளாமராக நடிப்பதென்றால் உள்ளே குதித்துவிடுவார். ஐட்டம் பாடல்களுக்காக மட்டும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் எட்டிப்பார்க்கும் இந்த ராய் ஒரு முழு ஜூலியாக இப்போது வந்துள்ளார்.

சினிமாவில் இப்போது நடிகைகளுக்கு பல பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சில விசயங்கள் வெளிவருகிறது. பல விசயங்கள் வெளிவருவதில்லை.

ஆனால் அத்திபூத்தாற் போல் அவ்வப்போது ஓரிரு குற்றங்கள் அம்பலமாகிறது. இப்படத்தில் ஒரு நடிகை சினிமாவில் உச்சத்தை அடைய என்னவெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது.

காசு சம்பாதிக்கும் ஆசையில்லாவிட்டாலும் காம வலையில் சிக்காமல் பார்த்துக்கொள்ள நினைத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒரு மனிதரை தவறு செய்ய வைக்கிறது என காட்டியிருக்கிறார்கள்.

சினிமாவில் மட்டுமல்ல அரசியிலில் உச்சத்தை அடைய நினைத்தாலும் கடைசியில் அவர்கள் உயிருக்கே ஆபத்து இருப்பதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நடிப்பில் காட்டிருக்கிறார்.

கிளாப்ஸ்

ராய் லட்சுமி ஜூலியாகவே மாறியுள்ளார். நடிப்பை பாராட்டலாம்.

ஓரிரு பாடல்கள் கேட்கும் படியாக இருக்கிறார். ஜூலி ஜூலி என தீம் செட்டாகிவிட்டது.

படத்திற்கேற்ற லைட் மீயூசிக் பிஜிஎம். அவ்வளவு தான்.

பல்பஸ்

ஒரு சிறு கதையை முழு நீள படமாக இழுத்து கொடுத்திருக்கிறார்களோ என தோன்றுகிறது.

படம் முழுக்க சீரியஸ் தான். நோ காமெடி. நோ ரிலாக்ஸ்.

வந்த வேகத்தில் அடுத்தடுத்து ஐட்டம் பாடல்களால் நிரப்பியது போல் உள்ளது.

டப்பிங் படம் எனாற் ஃபீல் கடைசி வரை நம்மை விட்டு விலகவில்லை.

மொத்ததில் ஜூலி 2 ஓகே. ராய் ஜூலியாக மாறியிருக்கிறாள். ஆனால் நிஜத்தில் சாத்தியமா என்றால் கேள்விக்குறி தான்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About