சினிமா
திரைவிமர்சனம்
நிகழ்வுகள்
இந்திரஜித் - திரைவிமர்சனம்
November 24, 2017
கௌதம் கார்த்திக் ஆரம்ப காலத்தில் தவறான படங்களின் தேர்வினால் மிகவும் தடுமாறினார். பின் அதை சுதாரித்துக்கொண்டு ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி என தொடர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்துவிட்டார். தற்போது இந்திரஜித் மூலம் அந்த பெயரை தக்க வைத்தாரா? பார்ப்போம்.
கதைக்களம்
தமிழ் சினிமாவின் அட்வென்ஜர்ஸ் கதைகள் வருவது அரிதிலும் அரிது. ஹாலிவுட்டில் புதையலை தேடும் இண்டியானா ஜோன்ஸ் வகை படங்கள் பலவற்றை பார்த்திருப்போம். அதேபோல் தமிழில் எடுக்க முயற்சித்துள்ள படம் தான் இந்திரஜித்.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன் சூரியனில் இருந்து ஒரு துகள் வெடித்து பூமிக்கு வர, அதன் மூலம் எந்த விதமான வரண்ட நிலமும் செழிப்பாகின்றது.
அதை வைத்து மனிதர்களுக்கு நோயே இல்லாத வாழ்க்கையை உருவாக்கலாம் என்பதை சில விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க, அதை தொடர்ந்து அந்த கல்லை தேடி இரண்டு கூட்டம் கிளம்புகின்றது.
அதில் ஒரு கூட்டத்தில் கௌதம் கார்த்திக்கும் இருக்க, இறுதியில் அந்த கல் யார் கைக்கு கிடைத்தது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கௌதம் கார்த்திக் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று ஓரளவிற்கு நல்ல ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வருகின்றார். இந்த படம் அவர் தோற்றத்தை வைத்தே சொல்லிவிடலாம் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியது என்று.
படம் நீண்ட நாட்களாக எடுத்து ரிலிஸாகாமல் இருந்தது படத்தின் காட்சிகளிலேயே தெரிகின்றது. ஹீரோயின் காட்சி பல இடங்களில் வெட்டி தூக்கியிருப்பார்கள் போல, ஆனால், அது படத்திற்கு பலம் தான்.
அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகள் முடிந்த அளவிற்கு சிறிய பட்ஜெட் என்றாலும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார்கள், இந்த பட்ஜெட்டிற்கு இவ்வளவு ரிஸ்க் பாராட்டப்படவேண்டும்.
ஆனால், ஒரு கல், அதை தேடிச்செல்லும் கும்பல் என கதையாக கேட்கும் போது சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். ஆனால் இந்த இந்திரஜித் திரைக்கதையாக கொஞ்சம் ஏமாற்றம் தான், ஒரு சில இடங்களில் ஏதோ டப்பிங் படம் தான் பார்க்கின்றோமோ என்று எண்ண வைக்கின்றது.
படத்தின் இசை கொஞ்சம் கொஞ்சம் இறைச்சலை ஏற்படுத்துகின்றது. அதை கவணித்திருக்கலாம், அதேபோல் படத்தில் அடர்ந்த காட்டில் பல விலங்குகளை காட்டி நம் எதிர்ப்பார்ப்பை எகிறவைத்து கடைசியில் ஏமாற்றத்தை தான் கொடுக்கின்றனர்.
க்ளாப்ஸ்
கதைக்களம் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள்
பல்ப்ஸ்
கதையை எடுத்தவிதம், எந்த ஒரு இடத்திலும் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரவில்லை.
மொத்தத்தில் இந்திரஜித்தின் பயணம் கடுமை என்றாலும் சுவாரசியம் மிக குறைவு.

0 comments