அன்பண்ணன் அப்படிப்பட்டவரு இல்ல! வரிசை கட்டி வாசிக்கும் கடன் காரர்கள்!

கோடம்பாக்கத்தின் குபேர வங்கிதான் பைனான்சியர் அன்புச்செழியன். அவர் கதவை மூடிவிட்டால் அவ்வளவுதான்… தமிழ் திரையுலகமே காலி. இந்த நிஜத்தை வேறு வ...

கோடம்பாக்கத்தின் குபேர வங்கிதான் பைனான்சியர் அன்புச்செழியன். அவர் கதவை மூடிவிட்டால் அவ்வளவுதான்… தமிழ் திரையுலகமே காலி. இந்த நிஜத்தை வேறு வேறு வார்த்தைகளால் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர். ‘நான் வாங்குனேன். நல்லாயிருக்கேன். அப்ப நீங்க?’ என்று விளம்பரத்தில் வரும் அப்பாஸ்கள் போல இவர்கள் வரிசை கட்டி பேசுவது வேடிக்கையாக இருந்தாலும், அவரவர்கள் வாயால் வருகிற கமென்ட்டுகள் எதுவும் புறக்கணிக்க தகுந்ததல்ல. விஜய் ஆன்ட்டனி, சுந்தர்சி, தேவயானி, சீனு ராமசாமி, லிங்கா புகழ் சிங்காரவேலன், இன்னும் நாளைக்கும் அதற்கு மறுநாளும் ஆடியோவை வெளியிடப் போகிற அன்பு உள்ளங்கள் என அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல, ‘அன்பண்ணன் போல வருமா?’ என்றே பேசுகிறார்கள். பேசப்போகிறார்கள்.

இதெல்லாம் எதற்கு? அன்புச்செழியனை அரக்கன் என்று வர்ணிக்கும் இன்னொரு கோஷ்டியால் அவரது இமேஜ் இறங்கிவிடக் கூடாதே என்பதற்காக. அதைவிட முக்கியம் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் இத்தகைய ஆடியோக்கள் அந்த நடவடிக்கையை இன்னும் நமத்துப் போக வைக்குமல்லவா?

அன்புச்செழியனை உத்தமர் என்று வர்ணித்திருந்த சீனு ராமசாமியின் ட்விட்டுக்கு கடும் ரீயாக்ஷன் காட்டியிருந்தார் கரு.பழனியப்பன். அதற்கப்புறம் விஜய் ஆன்ட்டனிக்கும் அவர் பதில் சொல்லியிருந்தார். இன்னும் சில இயக்குனர்கள் அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து சொல்கிற தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த மாறி மாறி அடித்துக் கொள்ளும் யுக்தியால், ஒரு தற்கொலை வெகு சீக்கிரம் மறக்கடிப்பட்டுவிட்டது.

கடைசி தகவல்- ‘கொடிவீரன்’ படம் இனி ஜென்மத்துக்கும் வராது என்பதாகவே இருக்கிறது. கல்குவாரி மணல்குவாரி மாதிரி, சினிமாவையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற ஒரு பொன்னான கருத்தை வெளியிட்டு அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கே பீதியூட்டி இருக்கிறார் அண்ணன் கருணாஸ் எம்.எல்.ஏ.

மேலும் பல...

1 comments

  1. கடைசி பாரா புன்னகைக்க வைக்கிறது. கொடிவீரன் என்பது பாரதிராஜா படம்தானே?

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About