நெஞ்சில் துணிவிருந்தால் - திரைவிமர்சனம் - ஓகே தான். இன்னும் முழுமைப்படுத்தியிருக்கலாம்.

நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களின் தாக்கம் படத்தில் எப்படியாவது இடம் பிடித்துவிடும். சிலர் படத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் குரல் கொடுப்பவர்...

நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களின் தாக்கம் படத்தில் எப்படியாவது இடம் பிடித்துவிடும். சிலர் படத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் சில அழுத்தமான கதைகளை கொடுக்கும் இயக்குனர் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் அவர் என்ன சொல்கிறார், நெஞ்சில் நிற்குமா என பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஹீரோவான சந்தீப் கிஷன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக அப்பாவை இழக்கிறார். இவருக்கு சூரி, விக்ராந்த் என நான்கு நண்பர்கள். ஒரே இடத்தில் வேலை செய்யும் இவர்கள் ஒன்றாக கூடினால் எண்டர்டெயின்மெண்ட் தான்.

தங்கை மற்றும் அம்மாவுடன் இருக்கும் சந்தீப் கிஷன் ஒருநாள் எதிர்பாராத விதமாக ஹீரோயின் மெஹ்ரினை சந்திக்கிறார். திடீரென ஒரு ஆட்டோ டிரைவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிடுகிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் அவர்கள் சந்திக்க காதல் துளிர்விடுகிறது.

டாக்டருக்கு படிக்கும் தன் தங்கை தன் நண்பரான விக்ராந்த்தை காதலிக்கும் விசயம் தெரியவர வீட்டில் பிரச்சனைகள் வெடிக்கிறது. அதே நேரத்தில் வில்லனான ஹரீஷ் உத்தமன் கையில் விக்ராந்த் சிக்குகிறார். இவரை குறிவைத்து அவரது கும்பல் சுற்றிவருகிறது.

இந்த விசயம் தனக்கு தெரியவர அதிர்ச்சியாகிறார் ஹீரோ. ஒரு கட்டத்தில் இவருக்கும் அவரின் தங்கை உயிருக்கும் பெரும் ஆபத்து சூழ்கிறது. தங்கையை காப்பாற்றினாரா, நண்பன் விக்ராந்த் ஆபத்தில் இருந்து தப்பித்தாரா, எதற்காக வில்லன் இவர்களை குறிவைக்கிறார்கள் என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ சந்தீப் கிஷன் ஒரு ஜாலியான டைப். பல தெலுங்கு படங்களில் நடித்தவர். யாருடா மகேஷ், மாநகரம் படத்திற்கு பிறகு தற்போது இப்படத்தில் இறங்கியுள்ளார். கேஷுவல் ஹீரோ போல இருக்கும் இவர் இப்படத்தில் ஓகே. இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆகியிருக்கலாமோ என தோன்றுகிறது.

சுசீந்திரன் ஏற்கனவே சொன்னது போல அவரது வழக்கமான படங்களை போல இல்லாமல், இப்படத்தில் ஹீரோயினுக்கு ஒரு சின்ன ரோல் தான். ஆனாலும் ஹீரோயின் வரும் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் அழகை கூட்டுகிறது. அதிலும் காலேஜில் இவர் செய்யும் லூட்டி ரசனை.

ஹரீஷ் உத்தமன் இப்படத்திலும் தனது திறமையை காட்டியுள்ளார். பிளான் போட்டு வேலை செய்யும் இவருக்கே கடைசியில் ஸ்கெட்ச் போட்டுவிடுவது கொஞ்சம் ட்விஸ்ட்.

காமெடிக்கு சூரி, அப்புக்குட்டி என இருவர் இருந்தாலும் சூரி தான் முன்னணியில் இருக்கிறார். வழக்கமான காமெடிகள் தான். நடிகர் விக்ராந்த் சொல்லவே வேண்டாம். ஏற்கனவே நடிப்பு திறமைக்கு பாராட்டை பெற்றவர். இப்படத்திலும் அதே போல ஸ்கோர் அள்ளுகிறார்.

முதல் கட்ட காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் கட்ட காட்சிகள் கொஞ்சம் வேகம் கூட்டுகிறது.

கிளாப்ஸ்

தமிழ்நாடு தற்போது சந்திக்கும் பிரச்சனைகளான நீட் தேர்வு குறித்து மறைமுகமாக சொன்ன விசயம் நன்று. தகுதி மதிப்பெண் பெற்றவரே உண்மையான மருத்துவராகும் தகுதியுள்ளவர் என ஹீரோ சொல்வது வேல்யூ பாயின்ட்.

பிரஸ்டீஜ் பிரச்சனையால் பல பெற்றோர் பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடுவதை வெளிச்சம் போட்டிருக்கிறார்கள். நட்பு நல்லுறவாக்கிய காட்சிகள் இளைஞர்களிடத்தில் கிரெடிஸ் கிடைக்கும்.

கிளைமாக்சில் ஹீரோ சந்தீப்பிடம் சீரியஸ்னஸ் குறைந்திருக்கிறது. சில இடங்களில் காமெடி கொஞ்சம் திருப்தி.

பல்பஸ்

சமூக வலைதளங்களில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லும் சுசீந்திரன் முழுமையாக இப்படத்தில் விசயத்தை சொல்லவில்லையோ என தோன்றுகிறது.

அவரின் படம் தானா என சில கேள்விகள் மனதில் வருகிறது. அவருக்கென்று இருக்கும் ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் நிறைவு பூர்த்தியாகவில்லை. படம் முழுக்க ஒரே மாதிரியான பிஜிஎம்.

மொத்தத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் சிம்பிள். ஓகே தான். இன்னும் முழுமைப்படுத்தியிருக்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About