‘’ரஜினி சார் சொன்ன தத்துவம் என் வாழ்க்கையில நடந்திருச்சு..!’’ - 'தீரன்' கார்த்தி

செம ஃபிரஷாக... கெத்தாக இருக்கிறார் கார்த்தி. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்காக மிடுக் போலீஸாக மாறியிருக்கிறார். படத்தின் ரிலீஸ் வே...

செம ஃபிரஷாக... கெத்தாக இருக்கிறார் கார்த்தி. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்காக மிடுக் போலீஸாக மாறியிருக்கிறார். படத்தின் ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

“சில ஹீரோக்கள் ஒரே சமயத்துல ரெண்டு, மூணு படங்கள் நடிக்கும்போது... நீங்க மட்டும் ஏன் ஒவ்வொரு படமும் ரொம்ப செலக்டிவ்வா, டைம் எடுத்துப் பண்ணுறீங்க. அதுக்குக் காரணம் என்ன?”

“அவங்களுக்கெல்லாம் கதை கிடைக்குதுங்க. எனக்குக் கிடைக்கலை அவ்வளவுதான். மத்தவங்களை நான் பிரதிபலிக்க முடியாது. எனக்கு என்ன வருமோ அதைத்தான் நான் ஸ்க்ரீன்ல காமிக்க முடியும். அப்படிங்கறப்போ அதுக்கு நான் டைம் எடுத்துக்க வேண்டியிருக்கு. அழுத்தமான கதைகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கு. அதுதான்.”

“உங்களுக்கு மெனக்கெட்டு நடிக்கறது ரொம்ப பிடிச்சுருக்கே ஏன்?”

“சினிமாவுக்குத் தேவைனா என்ன வேணாலும் பண்ணலாம். அது எனக்கு பேஷனாக இருப்பதால் அதை நான் அர்ப்பணிப்போட செய்யறேன். நான் எப்பவும் கதாபாத்திரமா மட்டுமே இருக்கேன். இயக்குநர் எல்லாவுமா இருக்கார். அதுக்கான ஃபுல் எபர்ட் நான் கொடுக்கணும்ல. அதுதான் மெனக்கெட்டு, இஷ்டப்பட்டு நடிக்கிறேன்."

“பத்துவருஷத்தில் ஒரு சக்ஸஸ் புல் ஹீரோ, நடிகர் சங்க பொருளாளர்னு படபடனு வளர்ந்து வந்துட்டீங்களே... இதை எல்லாம் கொஞ்சம் நிதானமா திரும்பிப்பார்த்தா எப்படி ஃபீல் ஆகுது?”

”கனவு மாதிரிதான் இருக்கு. இங்க சக்ஸஸ் ரேஷியோங்கறது ஒன் பர்சன்ட்தான். 'யாருக்கு யாரைப் பிடிக்கும்னு சொல்லமுடியாது. பிடிச்சுடுச்சுனா அப்புறம் அவங்களுக்கு லக்தான்'னு ரஜினி சார் சொல்வார். அப்படி ஒரு ஆசிர்வாதம் எனக்குக் கிடைச்சுருக்கு. இன்னொன்னு, நம்மகிட்ட மக்களுக்கு என்ன பிடிச்சுருக்கு அப்படிங்கறதையும் நான் புரிஞ்சுக்க வேண்டியிருக்கு. நான் சில படங்களில் தடுமாறி ஃபெயிலியர் ஆகியிருக்கேன். ஃபெயிலியர் இல்லாத லைஃப்பே இல்லைங்கறதையும் அக்செப்ட் பண்ணிக்கிட்டுதான் ஆகணும். நாம பண்ற விஷயம் நமக்குப் பிடிச்சுருக்கணும். இது எல்லாருடைய கெரியருக்குமே பொருந்தும். இப்போ ஒரு நிதானமும், தைரியமும் கிடைச்சுருக்கு.”

"காமெடி, ஆக்‌ஷன், ரொமான்ஸ் எல்லாக் கதைகளுக்குமே பொருந்தக் கூடிய ஹீரோவாக இருக்கீங்க. இதுக்கு எப்படித் தயார் பண்ணிக்கிறீங்க?"

“எல்லாம் ஆசீர்வாதம்தாங்க. அதுக்காக இது கால்குலேட்டட் கிடையாது. 'பருத்தி வீரன்' பட கேரக்டர்ல எல்லா ஷேட்ஸுமே இருந்தது. அப்பவே படபடனு எல்லா சீன்ஸும் நடிக்க வேண்டிருந்தது. அப்ப கத்துகிட்டதுதான். அதுக்கு அமீர் சார்தான் காரணம். அவருக்குதான் நான் இதுக்கு நன்றி சொல்லணும்."

“போலீஸ் கேரக்டருக்காக ஸ்பெஷல் ட்ரெய்னிங் எல்லாம் எடுத்துக்க வேண்டியிருந்துருக்குமே?”

“ஆரம்பத்தில் எங்க எல்லாருக்குமே சல்யூட் முதற்கொண்டு பயிற்சி கொடுத்தாங்க. என்கிட்ட எப்படி பேசணும், நான் எப்படி நடந்துக்கணும்னு நிறைய பயிற்சி. காவல்துறை அதிகாரிகளிடமே நேரடியா கத்துக்கிட்டோம். அங்க உண்மையிலேயே டி.எஸ்.பியா பயிற்சியில் இருந்தவங்க, 'சார் நீங்க இவ்ளோ ஈசியா யூனிஃபார்ம் போட்டுட்டீங்க'னு கிண்டல் செஞ்சாங்க. 'ஏங்க... நான் போட்டுட்டு திருப்பிக் கொடுத்துவேன். உங்களுக்கு அப்படி இல்லையே’னு சொன்னேன். அந்த அனுபவம் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது. அங்க  ஒருத்தர், ’சூர்யா அண்ணாவோட ‘காக்க காக்க’ அன்புச்செல்வன் பார்த்துதான் நான் போலீஸ் ஆகவே நினைச்சேன்'னு சொன்னார். இப்படி எவ்வளவோ நிகழ்வுகள் அந்த ட்ரெய்னிங் ப்ரீயட்ல கிடைச்சது."

“இந்தப் படம் ஒரு உண்மையான காவல்துறை அதிகாரியின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுனு சொன்னாங்க. யாரின் கதை? எந்த உண்மைச் சம்பவம்னு சொல்ல முடியுமா?"

“ரொம்ப வருஷமா யாரு குற்றம் பண்றாங்க என்பதே தெரியாம இருந்த கேஸ்ஸை எப்படிக் கண்டுபிடிச்சு முடிக்கறாங்க என்பதுதான் படம். பீரியட் ப்லிம்தான். செல்போன்லாமே 2000க்கு மேலதான் வந்துச்சு. அப்படிப்பட்ட நிலையில் டேட்டா கனெக்‌ஷன் இல்லாம ஒருத்தரைத் தொடர்பு கொள்றதில் இருக்கற சிக்கல்கள், சவால்கள் எல்லாம் தாண்டி எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க என்பது உண்மைக்கு நெருக்கமா சொல்லப்பட்டுருக்கு."

"ஸ்கிரிப்ட் ஏதாவது எழுதிட்டு இருக்கீங்களா?"

“இல்லைங்க. அதுக்கு நிறைய படிக்கணுமே... ஆரம்பத்துல எழுத்தாளர் ஜெயகாந்தன், சுஜாதானு நிறைய படிச்சுட்டிருந்தேன். இப்பப் படிக்க நேரம் கிடைக்கலை. சீக்கிரம் நிறைய படிக்கணும். படிச்சுட்டே இருந்தாதான் நல்ல ஸ்கிரிப்ட் எழுத முடியும். ஆனா, நடிப்பதற்கு கதை கேட்கும்போது ஸ்க்ரிப்ட்ல இருக்கற விஷயம் என்னவா வரும்னு யோசிக்க முடியுது. கதையா சொல்றப்போ நிறைய விஷயங்கள் விடுபடலாம். ஆனால், ஸ்கிரிப்ட்டா படிக்கும்போது அதைப் புரிஞ்சுக்க முடியும். அதுக்கு என்னோட இயக்குநர் மூளை யூஸ் ஆகுது."

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About