சென்னை மிதக்கிறது… விஜய் வீட்டில் மெர்சல் பார்ட்டி!

‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா? போங்கடா டேய்…’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலா...

‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா? போங்கடா டேய்…’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ‘இருந்தாலும் இந்த பார்ட்டியை வெள்ளம் வடிஞ்ச பிறகு வச்சிருக்கலாம்’ என்கிற மிதவாதிகள் அடுத்த பாராவுக்கு போகலாம். உங்கள் மனநிலை எதுவாக இருந்தாலென்ன? நடந்தது இதுதான்.

மெர்சல் படத்தின் தாறுமாறு கலெக்ஷன் இன்டஸ்ட்ரியை கொஞ்சம் மிரளதான் விட்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை விஜய், அட்லீ, போன்ற மெர்சலின் பில்லர்கள் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது?

சில தினங்களுக்கு முன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிய நல்ல நாளில் தன் நீலாங்கரை விட்டிற்கு கெஸ்ட்டுகளை அழைத்திருந்தார் விஜய். எந்த பார்ட்டிக்கும் வராத ஏ.ஆர்.ரஹ்மானே வந்திருந்தார் என்றால் அது எவ்வளவு முக்கியமான பார்ட்டியாக இருந்திருக்க வேண்டும்? வந்த வேகத்தில் பொக்கேவை கொடுத்துவிட்டு இசைப்புயல் கிளம்பிய பின்புதான் அவ்வளவு ஆட்டமும் கொண்டாட்டமும் என்கிறார்கள்.

சென்னை மிதக்குது. நாங்களும் மிதக்குறோம் என்பதாக எடுத்துக் கொண்டால் இந்த பார்ட்டி கரீட்டுதான்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About