உடலில் வளரும் தேவையற்ற முடியை நீக்க கோதுமை மாவே போதும்?

சிலருக்கு தேவையற்ற முடிகள் கை, கால் மற்றும் முகத்தில் உருவாகும். இவற்றை தடுக்கவே நம் முன்னோர்கள் சிறுவயதிலிருந்து மஞ்சள், பயற்றம் மாவு போன்...

சிலருக்கு தேவையற்ற முடிகள் கை, கால் மற்றும் முகத்தில் உருவாகும். இவற்றை தடுக்கவே நம் முன்னோர்கள் சிறுவயதிலிருந்து மஞ்சள், பயற்றம் மாவு போன்றவற்றை உபயோகித்தார்கள். நாம் அவற்றை நிறுத்திவிடுவதால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கிறது. வேக்சிங் என்ற பெயரில் மாதம் ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்க வேண்டியிருக்கிறது.

தொடர்ந்து முடியை நீக்குவது வளர்ச்சியை தூண்டுமே தவிர குறைக்காது. இங்கு உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த உதவும் பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

கீழ்வரும் பொருள்களைக் கொண்டு உடலில் இருக்கும் தேவையற்ற முடிகள் மட்டுமல்லாது அந்தரங்கப் பகுதிகளில் வளரும் முடியை நீக்கவும் பயன்படுத்தலாம். குறிப்பாக அந்தரப் பகுதிகளை இந்த முறையைப் பயன்படுத்தினா்ல சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தாலும் அலர்ஜி ஏதும் ஏற்படாமல் இருக்கும்.

    கோதுமை மாவு

கோதுமை மாவை சலித்த பின் வரும் தவிட்டைக் கொண்டு உடல் மற்றும் முகத்தில் தேய்த்து கழுவினால் விரைவில் முடி பலவீனமாகி உதிர்ந்துவிடும். முடி வளர்ச்சியையும் தடுக்கும். தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

    மைதா மாவு

மைதா மாவை முகம், கைகளில் தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவினால் முடியின் வளர்ச்சி விரைவில் குறையும்.

    சோளமாவு

சோள மாவு சிறந்த முறையில் முடி வளர்ச்சியை தடுக்கும். தினமும் காலை மாலை என இரு வேளை உபயோகித்தால் நல்ல பலன் கொடுக்கும்.

    அரிசி மாவு

அரிசி மாவு மிக திடமான முடிகளையும் அகற்றும் . அரிசி மாவுடன் சிறிது நீர் கலந்து முடி உள்ள இடங்களில் தேய்க்கவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

    பப்பாளி

பப்பாளியில் உள்ள என்சைம் இயற்கையாகவே கூந்தல் கற்றைகளை உடைக்கும் தன்மை கொண்டது. பப்பாளி சதைப்பகுதியுடன் மஞ்சள் சேர்த்து பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். விரைவில் முடியின் வளர்ச்சி குறையும்.

    பிரஷ்

உலர்ந்த பிரஷைக் கொண்டு உடலில் தேயுங்கள். இவை படிப்படியாக முடி வளர்ச்சியை குறைக்கும். அதோடு தழும்புகள், மருக்களும் மறையும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About