கமல்ஹாசனிடம் கருப்பு பணம்! அவரின் கோபம் இதுதான்! சீண்டிப்பார்க்கும் பிரபல நடிகர்

நடிகர் கமல் ஹாசனின் அரசியல் செய்திகள் இடம் பெறாத நாள் இருக்காது போல என சொல்லுமளவுக்கு ஏதாவது விஷயங்கள் இருந்து வருகிறது. அவர் தனக்கு பட்டதை...

நடிகர் கமல் ஹாசனின் அரசியல் செய்திகள் இடம் பெறாத நாள் இருக்காது போல என சொல்லுமளவுக்கு ஏதாவது விஷயங்கள் இருந்து வருகிறது. அவர் தனக்கு பட்டதை சொல்லிவிட இதை வைத்து சிலர் அரசியல் சர்ச்சையாக்கி விடுகிறார்கள். சமீபத்தில் அவர் இந்துக்கள் பற்றி குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையானது.

இந்நிலையில் சினிமாவில் மூத்த நடிகர், இயக்குனரான விஷு கமலை கலாய்த்துள்ளார். அவருக்கே உண்டான ஸ்டைலில் ஹலோ கமல்ஜீ என பெரிய அறிக்ககை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர், கமல் பெரிய அரசியல்வாதி ஆகிடுவீங்க, வாழ்த்துக்கள். ஏதோ ஒரு குள்ள நரி இந்துக்கள வச்சு பாலிடிக்ஸ் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கு.

சென்சார் போர்டுல உங்களுக்கு வேண்டாதவங்கள் அதிகாரி ஆக்கினாங்களே? அதான் கோபமா. பாவம் அவருக்கு யாருமே இல்ல. தனிக்கட்டை, வயசாகிடுச்சு. பாலிடிக்ஸ் பப்ளிசிட்டி.

சரி, ஒழுங்கா வரி கட்டுறீங்களாமே? சூப்பர், 100 ரூ வருமானத்துல 40 ரூ கணக்கு காட்டிட்டு அதுக்கு தான வரி கட்டுறீங்க! மிச்சம் 60 ரூ கருப்பு தானே என அவர் கூறியுள்ளார்.

கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் படத்திற்கு விசு தான் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

1 comments

  1. கமல்ஹாசன் ஒன்றும் எதேச்சையாக தனது மனதில் பட்டதை சொல்லி வரவில்லை.
    அவரும் திட்டமிட்டே அனைத்தையும் சொல்லி வருகிறார்.
    அவருக்கான எதிர்ப்பு குரல்களும் திட்டமிடப்பட்டவையே.
    தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல இந்த திட்டமிட்ட நாடகங்களை நம்புவதற்கு.

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About