மிஷ்கின் வெற்றிமாறன் கூட்டுக் கொள்ளை! அதிருப்தியில் உதவி இயக்குனர்கள்!

நிழல் தரும் மரங்களே நெருப்பை கொட்டினால் என்னாகும்? கிட்டதட்ட அப்படிதான் நடந்து கொள்கிறார்கள் மிஷ்கினும் வெற்றிமாறனும். இன்னமும் அதிர்ஷ்ட கோ...

நிழல் தரும் மரங்களே நெருப்பை கொட்டினால் என்னாகும்? கிட்டதட்ட அப்படிதான் நடந்து கொள்கிறார்கள் மிஷ்கினும் வெற்றிமாறனும். இன்னமும் அதிர்ஷ்ட கோட்டை அடையாத டைரக்டர் ராம் கூட இந்த கூட்டுக் கொள்ளை கூட்டத்தில் இருப்பதுதான் ஐயோ ஐயய்யோ…

விஷயம் இதுதான். ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து மிஷ்கினும் வெற்றிமாறனும் ராமும் உதவி இயக்குனர்களுக்கான ஒரு பயிற்சி பட்டறையை நடத்துகிறார்கள். இந்த பட்டறை நடப்பது இரண்டே நாட்கள்தான். இதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா? நெஞ்சை பிடித்துக் கொள்ளுங்கள்…. பத்தாயிரம் ரூபாய். ஒரு உதவி இயக்குனர் தன் வாழ்நாளில் அவ்வளவு பணத்தை மொத்தமாக பார்ப்பதே அபூர்வம் என்பது பல படிகளை கடந்து வந்த இவர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம்தான்.

ஒரு சில உதவி இயக்குனர்கள் மிஷ்கினை தொடர்பு கொண்டு, தொகை பெரிசா இருக்கே? நாங்கள்லாம் எப்படி வந்து கலந்துக்கறது என்று கேட்க…. பணமில்லேன்னா உங்களை யாருப்பா வரச்சொன்னது என்றாராம் அவர்.

கண்ணாடி மட்டுமல்ல… மனசும் அதே நிறம்தானா மிஸ்டர்?

மேலும் பல...

1 comments

  1. மேடையில் பேச விட்டால் மட்டும் பெரிய யோக்கியசிகாமணிகள் போல பேசுவார்கள்.

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About