ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட ரஜினி, கமல்!

ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக நடிகர்கள் கமலும், ரஜினியும் ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பரிமாற...

ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக நடிகர்கள் கமலும், ரஜினியும் ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

திரைப்படத் துறையில் சிறந்துவிளங்குபவர்களைத் தேர்வு செய்து ஆந்திர அரசு நந்தி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான என்.டி.ராமாராவ் பெயரில், என்.டி.ஆர். தேசிய விருது என்ற பெயரில் தெலுங்கு சினிமாவைக் கடந்தும் நாடுதழுவிய அளவில் விருது அளித்து கௌரவிக்கப்படுகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுக்கான  நந்தி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய விருதுக்கு நடிகர் கமலும், 2016-ம் ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினிகாந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About